வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

உயிர் பிழைக்கும் ஆசையில் மிருகமாய் மாறிய கூட்டம்.. யோகிபாபுவின் போட் டீசர் எப்படி இருக்கு.?

Boat Teaser: காமெடி மட்டுமல்லாமல் கதையின் நாயகனாகவும் அசத்தும் யோகி பாபு தற்போது சிம்பு தேவனுடன் கைகோர்த்துள்ளார். இந்த கூட்டணியுடன் கௌரி ஜி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ள போட் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

சுதந்திர போராட்ட காலகட்டத்தின் கதையாக இருக்கும் இப்படம் படகில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 1943 ஆம் ஆண்டு ஜப்பான் சென்னை பட்டினத்தின் மீது குண்டுகளை வீசுகிறது. அதில் தப்பி பிழைக்கும் யார் என்றே தெரியாத பத்து நபர்கள் ஒரு போட்டில் பயணிக்கின்றனர்.

Also read: தப்பிக்க முடியாத ஆபத்தான உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஆத்மா.. கொல நடுங்க வைக்கும் டிமான்டி காலனி 2 ட்ரெய்லர்

வங்காள விரிகுடா பக்கம் நகரும் அந்த போட் நடுகடலில் தத்தளிக்கிறது. 10 பேரின் பாரம் தாங்க முடியாமல் படகில் விரிசலும் ஏற்படுகிறது. அந்த படகை ஓட்டும் யோகி பாபு மூன்று பேர் தண்ணீரில் குதித்தால் தப்பிக்கலாம் என்று சொல்கிறார்.

மேலும் அகோர பசியுடன் இருக்கும் சுறாவும் படகை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொருவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடுகின்றனர். உயிர் பிழைக்கும் ஆசையில் எல்லோருக்குள்ளும் மிருகம் தலை தூக்குகிறது.

Also read: யோகிபாபு, சந்தானம் லிஸ்டில் சேர்ந்த சதீஷ்.. யுவன் கூட்டணியில் வேற லெவல் சம்பவம்

இந்த சூழ்நிலையில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? என்பது தான் படத்தின் கதை. இப்படியாக வெளிவந்துள்ள இந்த டீசர் தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு யோகிபாபு துணையுடன் களம் இறங்கும் சிம்பு தேவனை இந்த போட் கரை சேர்க்குமா அல்லது தத்தளிக்க வைக்குமா என்பது படம் வெளியில் வந்தால் தெரிந்து விடும்.

Trending News