வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

யோகி பாபுவின் மசால் வடையாக வந்த ஓவியா.. அதிரடியாக வெளியான பூமர் அங்கிள் டிரைலர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவருக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அதன் பின்பு சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். இதனால் சில கிளாமரான படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் பூமர் அங்கிள் படத்தில் ஓவியா நடித்துள்ளார். இந்தப் படத்தில் நேசமணி என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். மேலும் அரைகுறை ஆடையில் வந்திருக்கும் ஓவியாவை பார்த்து இது என்ன பாதியில் வந்திருக்கிறார் என யோகி பாபு கலாய்த்துள்ளார்.

Also Read : தலைக்கனத்தால் வாய்ப்புகளை இழந்த 5 நட்சத்திரங்கள்.. கண்டபடி பேசி பெயரைக் கெடுத்துக் கொண்ட ஓவியா

மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கரின் என்ட்ரி மாசாக உள்ளது. பூமர் அங்கிள் ட்ரெய்லரில் வெளியாகி உள்ளது. இதில் ஒரு பங்களாவிற்கு முதலிரவு கொண்டாட வரும் யோகி பாபுவிற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. அங்கு பேய்களின் அட்டூழியம் தாங்க முடியாமல் யோகி பாபு தவிர்த்து வருகிறார்.

கடைசியில் ஸ்பைடர் மேன் போல் மாறி உள்ள ஓவியா ரவுடிகளை எட்டி உதைக்கிறார். அப்போது தான் தெரிகிறது அது ஓவியா இல்லை ஒரு ஆவி என்று பஞ்ச் டயலாக்குகள் தெறிக்கவிட்டுள்ளனர். படத்தில் பலரை பூமராக கலாய்ப்பார்கள் என்றால் படத்தையே பூமராக எடுத்துள்ளார் இயக்குனர்.

Also Read : யோகி பாபு வீட்ல விசேஷம்.. தீபாவளியன்று அடித்த அதிர்ஷ்டம்

இப்போது யோகி பாபுவின் பூமர் அங்கிள் ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ள யோகி பாபுவின் இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்விக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

ட்ரெண்டிங்கில் இருக்கும் யோகி பாபுவின் பூமர் அங்கிள் டிரைலர்

Also Read : சந்தானத்தை பழிவாங்க நினைக்கும் பிரபலங்கள்.. கட்டி அரவணைத்துக் கொண்ட யோகி பாபு

Trending News