வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நிற்க கூட நேரமில்லாமல் 10 படங்களில் பிசியாக நடிக்கும் யோகி பாபு.. தலை சுற்ற வைக்கும் சொத்து மதிப்பு

Actor Yogi Babu: ஒரு காமெடி நடிகராக சினிமாவிற்குள் நுழைந்து தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக பேரும் புகழையும் சம்பாதித்தவர் யோகி பாபு. அதாவது வாயுள்ள பிள்ளைகள் எங்கே போனாலும் பிழைத்து விடும் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றார் போல் இவருடைய நக்கல் கலந்த நகைச்சுவையால் இவருக்கான இடத்தை நிலையாக தக்கவைத்துக் கொண்டார்.

தற்போது இவர் இல்லாமல் எந்த படங்களும் இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது. அதற்கு ஏற்றார் போல் தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி நடித்து வருகிறார். ஒரு புறம் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாகவும், மறுபக்கம் கதையின் நாயகனாகவும் அவதரித்து வருகிறார்.

Also read: யோகி பாபு கதையை திருடிய சிவகார்த்திகேயன்.. மட்டமாக வெற்றியை பார்க்க துடிக்கும் கொடுமை

இதனைத் தொடர்ந்து தற்போது இவர் கைவசம் 10 படங்கள் வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த மாவீரன் படத்திற்கு பிறகு வெளிவர இருக்கும் படங்களான ஜெயிலர், ஜவான், அயலான், எல்ஜிஎம், கங்குவா, அரண்மனை 4, சதுரங்க வேட்டை 2, அந்தகன், மருத்துவ அதிசயம், பூமர் அங்கிள், விஷாலின் 34 ஆவது படத்திலும் இணைந்துள்ளார்.

இப்படித் தொடர்ந்து எல்லா படத்திலும் இவரே நடித்துக் கொண்டு வருகிறார். அதற்கு காரணம் இவர் நடித்தாலே அந்த படம் இவரு காமெடிக்காவது கண்டிப்பாக ஓடிவிடும் என்ற நம்பிக்கை தான் பல இயக்குனர்கள் இவரை கமிட் செய்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இவர் நடிக்க இருக்கும் படங்களிலும் இவருடைய மார்க்கெட் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி கோடியில் சம்பளம் வாங்கி வருகிறார்.

Also read: சிவகார்த்திகேயனுக்கு பதில் யோகி பாபுவே நடிச்சிருக்கலாம்.. மாவீரன் சொதப்பிய 5 விஷயங்கள்

அந்த வகையில் தற்போது இவருடைய சொத்தின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவர் கமிட்டாகி உள்ள ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தது 3 கோடி சம்பளத்தை வாங்கி இருக்கிறார். அந்த வரிசையில் இவருடைய சொத்து மதிப்பு 40 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது என்பது வெளியாகி உள்ளது.

மேலும் இவருடைய ரசிகர்கள் இது யோகி பாபுவின் திறமைக்கு மிகவும் கம்மியான சொத்து தான். ஆனாலும் சினிமாவிற்குள் வரும்போது வெறும் 500 ரூபாய் சம்பளத்திற்கு வந்தவர், 10 வருடங்களுக்குள் இவ்வளவு சேர்த்தது பெரிய விஷயம் தான். அத்துடன் இதற்கு மேலையும் கூடிய விரைவில் சொத்துக்களை சேர்த்து வைக்கக் கூடிய திறமையானவர் என்று இவருடைய ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Also read: சின்னத்திரை நயன்தாராவுடன் ஜோடி சேரும் யோகி பாபு.. மண்டேலாவுக்கு மட்டும் அதிர்ஷ்டம் கூறை பிச்சுக்கிட்டு கொட்டுது

Trending News