வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

SK22 படத்தை இயக்கப்போகும் யோகிபாபு பட இயக்குனர்.. இன்று பூஜையுடன் துவக்கம்!

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, திரையரங்கில் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது.

இதில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிப்பதாகவும், படத்திற்கு மாவீரன் என்ற டைட்டில் வைக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை குறித்த அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கப் போகிறார்.

இந்தப் படத்தில் நடிகை சமந்தா அல்லது பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் ஆக உள்ளார். மேலும் இயக்குனர் மிஸ்கின் சிவகார்த்திகேயனின் 22-வது படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னிலையில் படத்திற்கான பூஜை இன்று நடைபெற உள்ளது.

எனவே SK21 மற்றும் SK22 ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடைபெற உள்ளது. இந்த இரண்டு படங்களிலும் நடித்து முடித்துக் கொடுக்க சிவகார்த்திகேயன் மும்முரமாக உள்ளார். மாவீரன் படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கனவே இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் நடத்தப்பட திட்டமிட்டு வரும் ஜூலை மாதம் முதல் துவங்கவுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK21 படத்தில் சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி முதல் முதலாக இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இதற்கிடையில் தற்போது டான் படத்தை முடித்துவிட்ட கையோடு தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாகிறது. படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு விருப்புடன் தயாராகிறது.

Trending News