வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சாந்தனுவுடன் எத்தனை படம் வேண்டுமானாலும் நடிப்பேன்.. 15 வருட நன்றிக் கடனை மறக்காத பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் மற்றவர்களை சிரிக்க வைக்கும் ஒரு கில்லாடி நடிகராக வலம் வரும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, பல நல்ல திரைக்கதைகளை கொண்ட படங்களை தேர்வு செய்து அதில் பிரமாதமாக நடித்து வருகிறார். யோகிபாபுக்கு கிடைத்த மிகப் பெரிய பட வாய்ப்பாக பார்க்கப்பட்டது தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம்.

இந்த படத்தில் யோகி பாபு நயன்தாரவை காதலிக்கும் காதல் மன்னனாக நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் நடித்த பிறகு முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களோடு பல திரைப்படங்களில் நடித்து தன்னோட மார்கெட் தரத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்.

தற்போது நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோன திரைப்படத்தில் யோகி பாபு நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் பாக்யராஜ் மகன் சாந்தனு நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய யோகி பாபு, ’15 வருடங்களுக்கு முன்பு முன்னணி இயக்குனரான பாக்கியராஜ் ஆபீஸ் வாசலிலேயே வாய்ப்பு கேட்டு பல நாட்களாக நின்றது உண்டு. அப்படி கிடைத்த வாய்ப்புதான் சிந்து +2 படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன்.

எனக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்த பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனுவின் படத்தில் எத்தனை தடவை வேணாலும் நடிப்பேன். அத்துடன் நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் என்னை தூக்கிவிட்டவரை பார்க்காமல் போவது பெரிய தவறு.

murungakkai-chips
murungakkai-chips

அவருடைய மகன் சாந்தனு நடிக்கும் படத்தில் பக்கத்தில் இருந்து ஒரு சிறிய சப்போர்ட்டாக இந்தப்படத்தில் நடித்துள்ளேன்’ என்று சுருக்கமாக யோகி பாபு பேசி உள்ளார்.

Trending News