பாலிவுட்டில் செல்வாக்குமிக்க கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜான்வி கபூர். இவர் 2018 ஆம் ஆண்டு, தடக் என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.
இவர் நடிப்பில் வெளியான பேய்கதைகள் உள்ளிட்ட சில படங்கள் சரியாகப் போகவில்லை. எனினும், குஞ்சன் சக்சேனா : தி கார்கில் கேர்ள் படமும், மிலியில் படத்தில் நடித்தற்காக பலராலும் பாராட்டப்பட்டார்.
அதன்பின், ரூஹி, மிலி, பவால், உலாஜ் உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்து தன் திறமையை நிரூபித்தார். ஸ்ரீதேவி – போனிகபூரின் மகளாக இருந்தாலும்கூட, வெற்றிப் படம் கொடுக்க சிறிது போராடினார்.
தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் இவர் இணைந்து நடித்த தேவரா படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீசானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று, 300 கோடிக்கு மேல் வசூலீட்டியது.
இப்படத்தின் வெற்றி மூலம், ஜான்வி கபூர் பாலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.