திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித் சார்ன்னு கூப்பிட முடியாது.. சர்ச்சையை கிளப்பிய விஷாலின் தடாலடி பேச்சு

நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகர் விஷால் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். நடிகர் சங்கத்தில் கார்த்தி, நாசர் உட்பட பலர் முக்கிய பொறுப்புகளில் இருந்தாலும் அவர்களை எல்லாம் பின்னால் இருந்து இயக்குவது விஷால் என்று பலருக்கும் தெரியும். அந்த வகையில் அவர் தற்போது நடிகர் சங்கம் பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதில் அஜித்தை பற்றி அவர் கூறிய ஒரு விஷயம் தற்போது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தற்போதைய தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே அவர் பற்றிய ஒரு செய்தி வெளிவந்தாலே அது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாக மாறிவிடும்.

Also read:வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டியில் விடும் லோகேஷ்.. தளபதி 67 க்கு வில்லனாகும் கோக்குமாக்கு நடிகர்

அந்த அளவுக்கு புகழுடன் இருக்கும் அஜித்தை எல்லோரும் மரியாதையாக தான் பேசுவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் விஷால், அஜித்தை பெயர் சொல்லி தான் கூப்பிடுவேன். சார் என்று கூப்பிட மாட்டேன் என கூறியிருப்பது அஜித் ரசிகர்களை சீண்டி பார்த்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் பேசிய இந்த கருத்து தற்போது சோசியல் மீடியாவில் ஒரு விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தனக்கு எதிராக பல விமர்சனங்கள் திரும்புவதை பார்த்த விஷால் தற்போது அதற்கான ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார். அதாவது நான் எதற்கு அஜித்தை சார் என்று கூப்பிட வேண்டும். பல காலமாகவே எனக்கு அவரை நன்றாக தெரியும். அதனால் நான் அஜித் என்று தான் கூப்பிடுவேன் என்று அவர் தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார்.

Also read:அஜித்தின் தூக்கத்தை கெடுத்த வாரிசு படத்தின் ஓவர் ஆல் பிஸ்னஸ்.. ரிலீஸுக்கு முன்பே டஃப் கொடுக்கும் தளபதி

மேலும் எனக்கும் அவருக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. எனக்கு அஜித், விஜய், கமல், ரஜினி என்று எல்லா நடிகர்களையும் பிடிக்கும். இதை வைத்து தேவையில்லாமல் நான் பப்ளிசிட்டி தேட விரும்பவில்லை. எனக்கும் அஜித்துக்கும் பிரச்சனை என்று கூறுவதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும், அஜித் ரசிகர்கள் அவரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் விஷால் எந்த நேரத்தில் எப்படி பேசுவார் என்று அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் இறங்கி பேசுவீர்கள் உங்கள் பேச்சை நாங்கள் நம்ப மாட்டோம் என்று அஜித் ரசிகர்கள் அவருக்கு எதிராக பேசி வருகின்றனர். உண்மையில் அஜித் நடிகர் சங்கம் தொடர்பான எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாதது விஷாலுக்கு ஒரு கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

Also read:தல கீழா நின்னாலும் வாரிசுக்கு பயந்து அத செய்ய மாட்டேன்.. அஜித் வெளியிட்ட அறிக்கையால் பதறிய திரையுலகம்

Trending News