வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 14, 2025

இதைவிட ஒரு கேவலமான சீரியல் எடுக்க முடியாது.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி . இத்தொடரில் தற்போது கோபி ராதிகாவை திருமணம் செய்ய உள்ளார். இந்த சூழலில் அந்த திருமண நிகழ்வுக்கு பாக்யா தான் சமையல் செய்கிறார். முதல் நாள் ரிசப்ஷனுக்கு தடபுடலாக பாக்யா சமைத்துள்ளார்.

மேலும் மண்டபத்துக்கு வந்துள்ள எல்லோருக்கும் ஜூஸ் கொடுத்து உபசரிக்கிறார்கள். அப்போது மாப்பிள்ளைக்கு ஜூஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக செல்வி கோபி ரூமுக்கு செல்கிறார். அங்கு கோபி பாட்டு பாடி கொண்டு சந்தோசமாக உள்ளார். இதை வெளியிலிருந்து கேட்கும் செல்வி மாப்பிள்ளை குஷியில் இருக்கிறார் என நினைத்துக் கொள்கிறார்.

Also Read :ஹீரோயினாக பல பேர் காணாமல் போய்ட்டாங்க.. ஆனா நின்னு கெத்து காட்டும் விஜய் டிவி பிரபலம்

இந்நிலையில் 7:00 மணிக்கே எல்லோரும் சாப்பிட வந்து விடுவார்கள் என பாக்யா எல்லாத்தையும் உடனே ரெடி பண்ண சொல்கிறார். அந்த சமயத்தில் மயூ தண்ணி குடிப்பதற்காக சமையல் அறைக்குள் வருகிறார். அப்போது மயூ பாக்யாவை எதர்ச்சையாக பார்த்து விடுகிறார்.

உடனே பாக்யா ஆன்ட்டி என மயூ கூப்பிடுகிறார். மேலும் தன்னுடைய அம்மாவின் கல்யாணம் தான் இது என மயூ பாக்யாவிடம் சொல்ல உள்ளார். இதனால் நிலைகுலைந்து போகும் பாக்யா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என உச்சகட்ட பரபரப்பில் இந்த வார பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read :விண்ணைத்தாண்டி வருவாயா ரேஞ்சுக்கு அரங்கேறிய ராஜா ராணி 2 திருமணம்.. சிம்புவை ஓவர் டேக் செய்த ஆதி

ஆனால் உண்மை தெரிந்தும் பாக்கியா தனது புருஷன் கல்யாணத்துக்கு சமைக்க உள்ளார். ஏற்கனவே புருஷன் தன்னை கைவிட்டாலும், இந்த ஒரு கான்ட்ராக்ட்டை நம்பி தனது குடும்பத்தை நடத்த வேண்டும் என்ற பொறுப்பில் பாக்யா உள்ளார்.

என்னதான் இருந்தாலும் புருஷன் கல்யாணத்துக்கு பொண்டாட்டி சமைப்பதா. இப்படி ஒரு மானங்கெட்ட சீரியலை யாராலும் எடுக்க முடியாது என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும் ராதிகா, கோபி திருமணம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் உள்ளது.

Also Read :மண்டபத்திற்கு ஜோடியாக வந்த கோபி-ராதிகா.. பரபரப்பை ஏற்படுத்திய பாக்யா

Trending News