சிவகார்த்திகேயனை நான் ரிஜக்ட் செய்தேன் என்று பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் தனக்கென தனியிடம் ரசிகர்கள் மனதில் பெற்றிருப்பவர் பாலாஜி சக்திவேல். இவர், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.
அதன்பின்னர். கடந்த 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த சாமுராய் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அப்போது போதிய வரவேற்பை பெறவில்லை. பெரிய பட்ஜெட் படம் தோல்வியைப் பெற்ற நிலையில் சிறிய பெட்ஜெட் படத்தில் தன் கதை, திரைக்கதை, இயக்கத்தை நம்பி அடுத்த முயற்சி களமிறங்கினார் பாலாஜி சக்திவேல்.
அந்தப் படம்தான் பரத், சந்தியா இருவரின் கேரியரில் மட்டுமல்ல பாலாஜி சக்திவேலையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது. இப்படத்தின் கதையும், இயக்கவும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, கல்லூரி, வழக்கு எண் 18/ 9 ஆகிய படங்களை இயக்கிய அவர் தற்போது அடுத்த படத்திற்கான முன்னெடுப்புகளில் ஈடுப்பட்டுள்ளார் என தெரிகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, மெரினா படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் அவரிடம் வாய்ப்புக் கேட்டபோது அவரை ரிஜக்ட் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாலாஜி சக்திவேல் தெரிவித்துள்ளதாவது:
“வழக்கு எண் 18/9 படத்திற்கு தேசிய விருது வாங்கியதை பெருமையாக கருதினார் லிங்குசாமி. இப்படம் உண்மைச் சம்பவம். இப்படத்திற்காக கதை, பெயர் என எதையும் கேட்கவில்லை. இதன் ஒளிப்பதிவை 5டி70 கேமராவில் மில்டன் செய்து கொடுத்தார்.ஸ்ரீ, மிதுன் இருவரும் நடித்தனர். லிங்குசாமி, இப்படத்திற்கு பணம் கொடுத்து, தனுஷிடம் கதை சொல்ல வைத்தார்.
பல காரணங்கால் அவர் நடிக்கவில்லை. இப்படத்திற்கு ஆடிசன் செய்தேன். அவர்களில், சிவகார்த்திகேயனும் ஒருவர். அவர் ஆடிசனுக்கு வந்து சைக்கிள் ஓட்டியபோது, என்னைப் பார்க்ககூடாது, என் அசிஷ்டண்ட்கள் தான் அதைப் பார்ப்பர். அவர் ஆடிஷனுக்கு வந்து ரிஜக்ட் பண்ணினதே எனக்கு பல ஆண்டுகள் கழித்து தான் தெரியும்.
சிவா, விஜய் டிவி-யில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் எதற்கு இப்படத்தில் சீரியசான கேரக்டர் செய்தால் நன்றாக இருக்காது. சமீபத்தில் அவரை பார்த்தபோது, நீங்க தப்பித் தவறி மேலே போய்விட்டீர்கள். கமர்ஷியல் ஹீரோவாக இருக்கிறார்” என்று கூறினேன். என்னைப் பொறுத்தளவில் இது ஒரு நல்ல ரிஜக்சன் என்று தெரிவித்துள்ளார். சினிமாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் முயற்சி, ரிஜக்சன் என்று அனுபவத்தை பெற்று இன்று சிவா பிரபல நடிகராக இருப்பதற்கு பலரும் பாராட்டுகள் கூறி வருகின்றனர்.