வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய் ஓட சேர்ந்த நேரம் 2 சிக்கலில் மாட்டிய ராஸ்மிகா.. கிரஷ் நடிகைக்கு இப்படி ஒரு அவப்பெயரா?

தளபதி விஜயின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனா அவருடன் வாரிசு படத்தில் நடிப்பதால் ஆரம்பத்தில் இருந்தே இப்போது வரை மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார். இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் ஆடிய முதல் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது.

இந்த பாடலை நடிகர் விஜய் மானசியுடன் இணைந்து பாடியிருக்கிறார். கவிஞர் விவேக் பாடல் வரிகள் எழுத தமன் இசையமைத்து இருக்கிறார். இதில் ராஷ்மிகா கரகாட்டக்காரி போலவே உடை அணிந்ததால் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கரகாட்டக்காரி என கிண்டல் செய்து வருகின்றனர்.

Also Read: கரகாட்டக்காரன் கோவை சரளாவிற்கு அடுத்தபடி நீங்கதான்.. பங்கமாக கலாய்த்ததால் நொந்து நூடுல்ஸ் ஆன ராஷ்மிகா

இந்நிலையில் விஜய்யுடன் சேர்ந்த நேரம் ஏற்கனவே கரகாட்டக்காரி என்று சொல்லி விட்டாங்க. இப்போது படங்களிலும் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என ராஷ்மிகா மந்த்னாவை கதற வைத்திருக்கின்றனர். அதாவது கன்னட திரைப்படங்களை அவமானிப்பதால் கன்னட படங்களில் ராஷ்மிகா மந்தனா நடிக்க தடை செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதைக் கேட்டதும் ராஷ்மிகாவின் ரசிகர்கள் மட்டுமல்ல இந்திய சினிமா திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் விஜய் உடன் வாரிசு படத்தில் நடித்த பிறகு தன்னுடைய மார்க்கெட் ரேட் எகிறும் என்று நினைத்துக் கொண்டிருந்த ராஷ்மிகாவிற்கு இப்போது இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு இருப்பது பெரும் அவலம்.

Also Read: கேவலமான பாடல் வரிகள், சர்ச்சையில் சிக்கிய வாரிசு பட ரஞ்சிதமே.. தளபதி இதுதான் உங்க சமூக பொறுப்பா?

இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இரண்டு வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் 2018 ஆம் ஆண்டு ரிலீசான ‘கீத கோவிந்தம்’ திரைப்படத்தின் மூலமே இவர் பிரபலமானார். இந்த படம் மற்ற மொழிகளிலும் ரிலீஸ் ஆனதால் இந்திய சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் ஹீரோயின் ஆனார்.

இப்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, அவருடைய சொந்த திரை உலகமான கன்னட திரையுலகில், அவர் படம் நடிக்க கூடாது என சொன்னதை எப்படி எதிர் கொள்வது என்றும் தெரியாமல் புலம்பி தவிக்கிறார்.

Also Read: கோடம்பாக்கத்திலேயே டேரா போட்ட ராஷ்மிகா.. வலையில் சிக்கிய விவாகரத்து நடிகர்

Trending News