சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சினிமா சூதாட்டத்தை புட்டுப்புட்டு வைத்த சந்தானம்.. ஒன்றரை வருடமாக அனுபவித்த வேதனை

காமெடி நடிகராக தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து, அதன்பிறகு ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் நடக்கும் சூதாட்டத்தை புட்டுப்புட்டு வைத்து கடந்த ஒன்றரை வருடமாக அனுபவித்த மரண வலியை பதிவிட்டிருக்கிறார்.

இவர் ஹீரோவாக நடித்த சமீபத்திய படங்களான சபாபதி, குளுகுளு, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் அனைத்தும் அட்டர் பிளாப் ஆனது. அதற்கு முன்பு மன்னவன் வந்தானடி, சர்வர்சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும் போன்ற மூன்று படங்களின் ஷூட்டிங்கும் துவங்கப்பட்டு அந்த மூன்று படத்திலும் ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சொல்லி படத்தை வெளிவர விடாமல் செய்து விட்டனர்.

Also Read: அடி விழுந்தால் தான் அம்மி நகரூம்.. ரூம் போட்டு கதறி அழும் சந்தானம்

இதனால் பயங்கர மன அழுத்தத்தில் ஒன்றரை வருடமாக மரண வலியை சந்தித்ததாகவும், அதன்பிறகு சந்தானம் மீண்டும் போராட ஆரம்பித்து தில்லுக்கு துட்டு 2 என்ற படத்தின் மூலம் மீண்டும் வெற்றியை சுவைத்தார்.

வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டால் தான், சில விஷயங்களை யோசித்து செயல்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். முதலில் தயாரிப்பாளர்களிடம் சரியாக தேர்வு செய்ய வேண்டும் என கூறுகிறார். ஏனென்றால் உடலுழைப்பை போட்டு படத்தில் நன்றாக நடித்திருந்தாலும் படத்தை சரியான ஆட்களிடம் விற்கவேண்டும்.

Also Read: வேறுவழியில்லாமல் துவண்டு போன சந்தானம் செய்யும் வேலை.. மேடையிலேயே வெளியான தகவல்

படத்தை வாங்குபவர்கள் அதை சரியாக ரிலீஸ் செய்கிறார்களா என்றும் பார்க்க வேண்டும். சினிமாவை சூதாட்டமாக நினைத்து சிலர் ஆடுவதால், அதனால் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுகிறது என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது.

அப்படி தான் என்னுடைய மூன்று படங்களும் ரிலீஸ் ஆகாமல் பெரும் நஷ்டம் ஆகி வாழ்க்கையே சூனியமாகி விட்டது. ஆனால் மம்மி படத்தில் வருவது போன்று மீண்டும் மீண்டும் எழுந்து சினிமாவில் கடைசி வரை நிற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைத்துக்கொண்டே இருப்பேன் என்று சந்தானம் உணர்ச்சி பூர்வமாக பேசியிருக்கிறார்.

Also Read: டயட் என்ற பெயரில் உடம்பை மோசமாக்கிய 5 பிரபலங்கள்.. நோயாளிபோல் மாறிய சந்தானம்

Trending News