வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிகினிங் படத்தை பார்த்தே ஆக வேண்டும்.. ஆர்வத்தில் லோகேஷ் கனகராஜ், ஷங்கர்

ஜெகன் விஜயா இயக்கத்தில் உருவான பிகினிங் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. இது ரசிகர்களின் கவனத்தை பெற்றது மட்டுமின்றி பிரம்மாண்ட இயக்குனர்களை ஆச்சரியப்படும் விதமாக இருந்தது. அதாவது ஒரே படத்தில் இரண்டு காட்சிகள் வைத்து இப்படத்தை படமாக்கி உள்ளனர்.

இந்த படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஒரே படத்தில் இரண்டு ஸ்க்ரீன், இரண்டு கதைகள் என்ற வித்தியாசமான முயற்சியை ஆசியாவில் முதல் முறையாக பிகினிங் படத்தின் இயக்குனர் கையாண்டு உள்ளார்.

Also Read : 2 ஸ்கிரீன், 2 கதை வியக்க வைத்த பிகினிங் ட்ரெய்லர்.. அனல் பறக்கும் விமர்சனம்

அதாவது ஒரே திரையில் ஒருபுறம் ஒரு காட்சியும் மற்றொருபுறம் வேறொரு கதை உடைய காட்சியும் ஒளிபரப்பாகி வரும். கடைசியில் படம் முடியும்போது இந்த இரண்டு கதையையும் ஒன்றாக சேர்த்து ஒரே மாதிரியாக முடிப்பார்கள். மேலும் இந்த ட்ரெய்லரில் அம்மா, மகன் உண்டான கதையை கையாண்டு உள்ளனர்.

பிகினிங் படத்தில் இயக்குனர் செய்த புதிய முயற்சியை கேள்விப்பட்ட லோகேஷ் கனகராஜ் மற்றும் ஷங்கர் ஆகியோர் இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனராம். இதை எப்படி எடுத்துள்ளார் என்ற ஆர்வமும் அவர்களுக்கு உள்ளதாம்.

Also Read : ஓவரா அலைக்கழிக்கும் லோகேஷ்.. தளபதி 67ஆல் குழம்பி போயிருக்கும் விஜய்

சினிமாவில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான முயற்சி நடைபெற்று தான் வருகிறது. இப்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் தொடர்ச்சியையும் அடுத்தடுத்த படங்களில் கதாபாத்திரங்கள், கதை ஆகியவற்றை கொண்டு வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்போது பிகினிங் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு நிறைய விருதுகளை வாங்கி குவித்துள்ளது. ஆகையால் படம் வெளியான பின்பு பல விருதுகளை வாங்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : துணிவுக்கு பின் லோகேஷ் உடன் நேரடியாக மோதும் எச் வினோத்.. யாரும் எதிர்பார்க்காத மெர்சல் கூட்டணி

Trending News