வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

100-வது படத்தில் நீங்க தான் நடிக்கணும்.. ஆசை ஆசையாய் வந்த பிரபலத்தை விரட்டி அடித்த தனுஷ்

தனுஷின் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகி இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த திரைப்படம் பிரிட்டிஷ் கால படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

தனுஷ் இப்பொழுது பயங்கர பிஸி. 2025 ஆம் ஆண்டில் என் பக்கத்தில் யாரும் வராதீர்கள் என்று எல்லா தயாரிப்பாளரையும் டீலில் விட்டு வருகிறார். இப்பொழுது சமீபத்தில் தன்னுடைய 100 வது படத்தை தனுஷ் தான் நடிக்க வேண்டும் என்று ஆசையாக அவரை அணுகிய தயாரிப்பாளருக்கு இடி விழும் படி ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறார்.

Also Read: எலும்பா, ஆமை என தனுஷ், அஜித்தை கலாய்த்த பிரபலம்.. பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய இளம் நடிகர்

மூன்று வருடங்கள் நான் பிஸி. என் பக்கம் வராதீர்கள் என்றும் அவரை டீலில் விட்டு விட்டாராம். தனுஷ் இப்பொழுது கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1930-40களில் நடக்கும் கதையாக ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் தனுசுடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அவர்களுடன் இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கிறார்.

ஏற்கனவே கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முடிந்துவிட்டது. தற்போது டிசம்பர் மாதத்தில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. இந்த படத்திற்குப் பிறகு தெலுங்கு ப்ரொட்யூசர் படம் பண்ண இருக்கிறார், மதுரை அன்புச் செழியன்க்கு ஒரு படம் பண்ணுகிறார். சன் பிக்சர்ஸ் ஒரு படம் பண்ணுகிறார், லலித்துக்கு ஒரு படம் பண்ணுகிறார்.

Also Read: சிவாஜியின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்க துடிக்கும் ரஜினி.. மருமகனையும் மகனாக நடிக்க வைக்க ஆசையாம்!

இப்படி பிசியாக இருக்கும் தனுஷ் என் பக்கத்தில் வரவே வேண்டாம் என்று எல்லாரையும் விரட்டி அனுப்புகிறார். ஆகையால் கமிட்டான இந்த படங்களை எல்லாம் வரிசையாக முடித்துக் கொடுத்துவிட்டு தான் இனிமேல் புதிதாக கதை கேட்க வேண்டும் என்ற முடிவில் தனுஷ் இருக்கிறார்.

அதை மீறி தன்னிடம் வருபவர்களிடம் காட்டமாகவும் நடந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய100-வது படத்தில் தனுஷ் நடிக்க வேண்டும் என ஆசை ஆசையாக வந்த தயாரிப்பாளரையும் விரட்டி அடித்தது தான் தற்போது ஹாட் டாப்பிக்காக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Also Read: காஸ்ட்லி ஷூ உடன் வலம் வரும் தனுஷ்.. நீண்ட தாடியுடன் கேப்டன் மில்லர் படத்தின் நியூ லுக்

Trending News