செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

அந்த நடிகரா? வேண்டவே வேண்டாம்.. பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடிய நடிகை

சமீபகால பிரபல நடிகர் ஒருவருடன் ஜோடியாக நடித்த இளம் நடிகை தொடர்ந்து பட வாய்ப்புகளை வேண்டாம் என்று உதறி கொண்டிருப்பது இருவருக்குள்ளும் ஏதோ ஒரு கிசு கிசு இருப்பது போலவே தெரிகிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் தேசத்திலிருந்து வந்தவர் தான் அந்த நடிகை. ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்ததால் வேகவேகமாக வளர்ந்தார். ஆனால் குறிப்பிட்ட ஒரு நடிகருடன் நடித்த பிறகு தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

சில வருடங்கள் தமிழ் சினிமா பக்கமே வராத அந்த நடிகை தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் படங்கள் செய்யலாமென ஆசை பற்றிக் கொள்ள உடனே தனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டுள்ளார்.

அந்த வகையில் ஒரு நடிகரின் பட வாய்ப்புள்ளது எனக்கூறி இயக்குனரை வரச்சொல்லி கதை கேட்டு எல்லாமே ஓகே செய்து விட்டாராம் அந்த நடிகை. ஆனால் கடைசியாக ஹீரோ யார்? என கேட்டுள்ளார்.

அப்போ அந்த இயக்குனர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்து போன அந்த நடிகை, இந்த நடிகர் படம் என்றால் இந்த பக்கமே வராதீர்கள் என இயக்குனரை அடித்து துரத்தாத குறையாக விரட்டி விட்டு விட்டாராம்.

அந்த நடிகரின் பெயரை கேட்டாலே கோபப்படும் அளவுக்கு அந்த நடிகையை அவர் என்ன பண்ணினார் என்பதை தற்போது கோலிவுட் சினிமாவில் உள்ள சிலர் துப்பு துலக்க தொடங்கியுள்ளனர்.

Trending News