தமிழ் சினிமாவைப் பொருத்தவரை அந்தக் காலத்தில் எல்லாம் செட்டுக்குள்ளே படப்பிடிப்பு காட்சிகளை எல்லாம் அமைத்து படமாக்குவார்கள். ஆனால் இந்த காலத்தில் உருவாக்கப்படும் படங்களில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சிகளும் வேறு வேறு இடங்களிலும், ஏன் வேறு வேறு நாடுகளுக்கும் சென்று படமாக்கப்படுகின்றனர்.
எனவே சினிமா பிரபலங்களின் வசதிக்காக ஒரே வாகனத்திலேயே அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்ட கேரவனை முதல் முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பிரபல இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் தான்.
பின்பு அவர் அந்த கேரவனை பல பிரபல நடிகர் நடிகைகளுக்கு வாடகைக்கும் விடத் தொடங்கினார். தற்போது இந்த பழக்கவழக்கமானது சினிமாத்துறையில் பெரிதும் பிரபலமாகி வருகிறது. நயன்தாரா, அஜித் போன்ற ஒரு சில பிரபலங்கள் படப்பிடிப்பிற்கு சொந்தமான கேரவனை பயன்படுத்தாமல் தங்களுக்கென்றே தனியாக கேரவனை சொந்தமாக வைத்து கொண்டு அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கேரவனில் வீட்டில் இருக்கும் அனைத்து வசதிகளும் இடம் பெறும். அதன் காரணமாகவே ஒவ்வொரு சினிமா பிரபலங்களும் இதனை தங்களது மற்றொரு வீடாகவே நினைப்பதுண்டு.
ஆனால் பழம்பெரும் நடிகர்கள் சிலர், கேரவன் வந்தபிறகுதான் ஒரு படத்தில் பணிபுரியும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் இடையே ஒற்றுமை என்பதே இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால் இந்த கேரவன் இல்லை என்றால் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, பேசி பழகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்ற கருத்தை பதிவிடுகின்றனர்.
ஆனால் வேறு சிலர் இப்படி வித்தியாசமாக யோசித்து அனைத்து சொகுசான வசதிகளையும் கொண்ட கேரவனை தமிழ் சினிமாவிற்கு தந்த மணிவண்ணனுக்கு தற்போது உள்ள இளம் நடிகர் நடிகைகள் நன்றி கூறி வருகின்றனர்.