ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இனி தனுசுக்கு போட்டி சிம்பு இல்ல இவர்தான்.. வளர்த்துவிட்ட கெடா மார்ல பாயுது

young actor competitive with dhanush: ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ரெண்டு நடிகர்களுக்கிடையே கடும் போட்டி நிலவும். தொடக்கத்தில் எம்ஜிஆர், சிவாஜி அதன்பின் ரஜினி, கமல் இப்போது அஜித், விஜய் தவிர தனுஷுக்கு போட்டியாக கொஞ்சம் காலம் சிம்பு இருந்தார்.

ஆனால் இப்போது தனுஷுக்கு, அவர் வளர்த்து விட்ட இளம் நடிகரான சிவகார்த்திகேயனே போட்டியாக நிற்கிறார். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்த சிவகார்த்திகேயன், தனுஷ் நடித்த 3 படத்தில் ஸ்டாண்டப் காமெடியில் பிச்சு உதறினார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் வரிசையாக குவிந்தது.

அது மட்டுமல்ல சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படத்தை தனுஷ் தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்ட தனுசுக்கு அவரே இப்போது போட்டியாக மாறி நிற்கிறார். தற்சமயம் தனுஷின் ஆசை என்னவென்றால் சிவகார்த்திகேயனை விட அதிக சம்பளம் வாங்கணும், அவருடைய படங்களை விட தன்னுடைய படங்கள் அதிக வசூல் ஆகணும் என்பதுதான்.

Also Read: தனுசுடன் மல்லுகட்ட போகும் நடிகர்… உண்மையை உடைத்த ஜிவி பிரகாஷ்

தனுஷுக்கு போட்டியாக வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்

ஆசைப்பட்டது போல் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் இப்பொழுது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் 200 கோடி ப்ரீ பிசினஸ் ஆகிவிட்டது. இதனால் தனுஷ் சம்பளமும் அதிகமாகும். ஆனால் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் படத்தின் பிரீ பிசினஸும் தாறுமாறாக எகிறுதாம்.

படம் ரிலீஸ் ஆனா இன்னும் அதிகமாகும். தனுஷ் என்ன பண்ணாலும் சிவகார்த்திகேயனை முந்த முடியவில்லை. இப்போது விஜய்- ரஜினி மாதிரி இனிமேல் தனுஷ், சிவகார்த்திகேயனிடம் தான் பயங்கரமா கிளாஸ் ஆகப்போகிறது. வளர்த்து விட்ட கெடா மார்பிலே பாயுதே என்று தனுஷ் சிவகார்த்திகேயனை பார்த்து நொந்துக்கிறார்.

Also Read: நடிகர் திலகம் சிவாஜி தட்டிக் கொடுத்து வளர்த்த பப்லு.. குழந்தை நட்சத்திரமாக நடித்த 5 படங்கள்

Trending News