புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கள்ளக்காதலியுடன் ஊட்டிக்கு ஹனிமூன் சென்ற இளம் நடிகர்.. விரட்டி பிடித்து வெளுத்து வாங்கிய மனைவி

சினிமாவை பொறுத்தவரை கள்ளக் காதல் என்பதெல்லாம் சாதாரண விஷயம்தான். யார் வேண்டுமானாலும் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் ஜாலியாக இருந்து கொள்ளலாம். அவர்களைப் பெற்றவர்களே அதை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் படத்தில் நடிக்க சென்றபோது நடிகை ஒருவரை உஷார் செய்து ஊட்டிக்கு ஹனிமூன் சென்ற நடிகரை அந்த நடிகரின் மனைவி விரட்டி பிடித்ததைப் பற்றி கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

பெரிய அளவு ஹீரோவாக வலம் வரவில்லை என்றாலும் சின்ன சின்ன கவனிக்கப்படும் கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் அந்த இளம் நடிகர். அவருக்கு சொந்த ஊர் என்னமோ கன்னட சினிமா தான். ஆனால் நடிப்பதெல்லாம் தமிழ்தான்.

சமீபத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகை ஒருவருடன் காதல் ஏற்பட்டு விட்டதாம். இத்தனைக்கும் அந்த நடிகருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் அந்த நடிகை இடம் கொடுக்க காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி பாய்ந்து விட்டாராம் நடிகர்.

இந்நிலையில் அடிக்கடி இரவு நேரங்களில் தனிமையில் அந்த நடிகையுடன் சுற்றித் திரிந்த அந்த நடிகர், எங்கேயாவது மலைப் பிரதேசத்திற்கு செல்லலாம் என நடிகையை லேசாக சுரண்டி உள்ளார். அந்த நடிகையும் ஆர்வமாக இருக்க உடனடியாக இருவரும் ஊட்டிக்கு சென்று விட்டார்களாம்.

காதல் மயக்கத்தில் ஊட்டி தன்னுடைய மனைவியின் சொந்த ஊர் என்பதை மறந்து விட்டாராம். அந்த நடிகையுடன் ஊட்டியில் கொஞ்சிக் குலாவி திரிந்ததை மனைவியின் உறவினர்கள் போன் செய்து போட்டுக் கொடுக்க உடனடியாக சொந்த பந்தங்களுடன் கிளம்பிச் சென்று விட்டாராம் அந்த நடிகரின் மனைவி.

ஹோட்டலிலேயே வைத்து விடிய விடிய பஞ்சாயத்தாம். அந்த நடிகையோ துண்ட காணோம், துணிய காணோம் என ராத்திரியோட ராத்திரியாக தன்னுடைய சொந்த ஊரான மும்பைக்கு கிளம்பி விட்டாராம். கல்யாணம் ஆகியும் உனக்கு இன்னொரு பொண்ணு கேக்குதா என மனைவி புரட்டிய புரட்டில், இனி சினிமாவே வேண்டாம் என ஓட்டம் பிடித்து விட்டாராம் அந்த இளம் நடிகர்.

Trending News