குறித்த தேதியில் ரிலீசாகாமல் நீண்டநாள் இழுத்துக்கொண்டிருக்கும் படங்கள் வெளியானால் கண்டிப்பாக வெற்றி பெறாது என்ற சரித்திரத்தை மாற்றி எழுதிய படம் தான் ரஜினி முருகன்.
சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டை ஆடிய திரைப்படம். முதலில் இந்த படம் குறித்த தேதியில் வெளியாகவில்லை. சில பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி தடுமாறியது.
ஒரு காலத்தில் வெற்றி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருந்த லிங்குசாமி ரஜினிமுருகன் படத்தை தயாரிக்கும் நேரத்தில் சில கடன் பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமானதால் ரஜினி முருகன் படத்தை வெளியிட முடியாமல் தடுமாறி வந்தார்.
அதன் பிறகு சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க கடனை அடைத்து படம் சில நாட்கள் தள்ளி பொங்கல் வெளியீடாக வெளியானது. யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து ஏகப்பட்ட லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது.

இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் ஆர்யா தானாம். பொன்ராம் இயக்குனர் ராஜேஷ் இருவரும் நண்பர்கள் என்பதால் ராஜேஷ் இயக்கி வந்த சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார் பொன்ராம்.

அப்போதே ரஜினி முருகன் படத்தின் கதையை எழுதி ஆர்யாவிடம் சொன்னதாகவும், ஆர்யா கதையில் பெருசாக ஒண்ணுமே இல்லையே என்று கூறி அந்த படத்தை நிராகரித்து விட்டாராம். பின்னர் ரஜினி முருகன் படம் வெற்றி பெற்றதும் ஆர்யா முகத்தில் ஈ ஆடவில்லையாம். இந்த தகவலை படத்தின் இயக்குனர் பொன்ராம் சமீபத்திய டூரிங் டாக்கிஸ் யூடியூப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.