இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் அடுத்ததாக கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் தற்போது அந்த படம் பாதி கிணறு தாண்டி மீதி கிணறு தாண்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இதையே நம்பினால் வேலைக்காகாது என அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து பழமொழிகளில் ஒரு படம் இயக்க உள்ளார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன.
மேலும் சங்கர், ராம்சரண் இணையும் படம் முதல்வன் 2 படத்தின் கதையாக இருக்க வாய்ப்பிருக்கு என்கிறது சினிமா வட்டாரம். ராம்சரண் தற்போது ராஜமவுலி இயக்கி வரும் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இன்னும் ஓரிரு வாரங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். அதனைத் தொடர்ந்து ஷங்கரின் படத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி விடலாம் என பச்சைக் கொடி காட்டியுள்ளார் ராம்சரண்.
அதே நேரத்தில் சங்கருக்கு ஒரு கட்டளை போட்டுள்ளாராம். இந்தியன் 2 பிரச்சனை காரணமாக சங்கர் மற்ற மொழிகளில் படம் இயக்கக் கூடாது என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இது சம்பந்தமான பிரச்சனையை இன்னும் ஒரு வாரத்தில் தீர்த்துவிட வேண்டும் என சொல்லி உள்ளாராம்.

அப்படி இல்லை என்றால் உங்கள் படம் இப்போதைக்கு இல்லை எனக் கூறி விட்டாராம் ராம்சரண். இதனால் சங்கர் தரப்பு மிகவும் அப்செட். சங்கரும் ஒரு சின்ன பையன் பேசுற அளவுக்கு இந்த லைக்கா நிறுவனம் நம்மளை ஆக்கிவிட்டதே என செம கடுப்பில் உள்ளாராம்.