தமிழ் சினிமாவில் நடிகர் விவேக்கின் இழப்பு ஏற்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. ஒரு நல்ல மனிதன் இவ்வளவு சீக்கிரத்தில் இயற்கை எய்துவார் என எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை பார்க்க முடிகிறது.
காமெடி நடிகராக மட்டுமல்லாமல் சமூக சேவை செய்யும் மனிதராகவும் இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். மூச்சுக்கு முன்னூறு முறை மரம் நடுங்கள் என்று கூறுபவர். அதன் காரணமாகவே இன்று பலரும் தங்களுடைய வீடுகளில் மரங்களை நட்டு விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பல நட்சத்திரங்கள் நேரில் சென்றும் சிலர் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களுடைய இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். பெரும்பாலும் அனைத்து நடிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டனர்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசி வரையில் விவேக் சார் உங்களுடன் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று உருக்கமான பதிவை போட்டுள்ளது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் மூத்த காமெடி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்ததாகவும், அதற்குள் விவேக்கிற்கு இப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை எனவும் சிவகார்த்திகேயன் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
மேலும் விவேக் தற்போது சில படங்களில் நடித்து வந்தார். தற்போது அந்த படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 திரைப்படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.