திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஹரி, லிங்குசாமிக்கு செக் வைத்த இளம் நடிகர்கள்.. இந்தப்படம் ஜெயிச்சா நாங்க வாய்ப்பு தரோம்

ஒரு காலகட்டத்தில் ஹரி மற்றும் லிங்குசாமி போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஹீரோக்கள் வாரி வரிந்து கொண்டு வருவார்கள். ஆனால் சில காலங்களாக இவர்கள் படங்களை இயக்காமல் இருந்தனர். இதனால் தற்போது தமிழ் சினிமாவில் நிறைய இளம் இயக்குனர்கள் வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருவதால் பெரிய நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றவர்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். இதனால் பழைய இயக்குனர்கள் படத்தில் நடிக்க டாப் நடிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

இந்நிலையில் தற்போது இயக்குனர் ஹரி அருண் விஜய்யை வைத்து யானை படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் எப்போதும் உள்ள ஹரி படத்தை போல் இல்லாமல் இது சென்டிமெண்ட் கலந்து கொஞ்சம் வித்யாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் பலமுறை தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அதேபோல் இயக்குனர் லிங்குசாமி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் படம் இயக்காமல் இருந்த நிலையில் தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனியை வைத்த தி வாரியர் படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தி வாரியர் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் யானை படம் வெற்றி பெற்றால் ஹரிக்கு ஜெயம் ரவி வாய்ப்பு தருவதாகவும், தி வாரியர் படம் வெற்றி பெற்றால் சிம்பு லிங்குசாமிக்கு வாய்ப்பு தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் இந்த இரு இயக்குனர்களும் தற்போது வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களுகே தற்போது இதுதான் நிலைமை. மேலும் ஏற்கனவே லிங்குசாமியின் தி வாரியர் படத்தில் புல்லட்டு பாடலை சிம்பு பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News