அக்கட தேசத்திலிருந்து வந்த இளம் நடிகை ஒருவர் படவாய்ப்பு இல்லாத சமயத்திலும் கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து வரும் விஷயம் கோலிவுட் வட்டாரங்களில் உள்ள கிசுகிசு மன்னர்களின் காதுக்கு எட்டி விட்டதாம்.
இசையமைப்பாளர் ஒருவரின் படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அந்த நடிகை. முதல் படத்திலேயே அரைகுறை உடை, பப்ளியான தோற்றம் என அனைவரையும் ரசிக்க வைத்தார். அடுத்தடுத்து இரண்டாம் கட்ட இளம் நடிகர்களுடன் தொடர்ந்து பல படங்களில் ஜோடி போட்டார்.
அவரது நேரமோ என்னமோ, அந்த நடிகை நடித்த எந்த படமும் ரசிகர்களை கவரவில்லை. நல்ல படம் நடித்தால் கண்டுக்க மாட்டார்கள் போல என நினைத்து அடல்ட் படத்திலும் நடித்தார். முடிந்த வரை கவர்ச்சி காட்டியும் ரசிகர்கள் ஏறெடுத்து பார்க்கவில்லை.
இதற்கிடையில் தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரை சமீப காலமாக காதலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஹீரோவாக பெரிய அளவு வெற்றியை சுவைக்க முடியாத அந்த நடிகர் தற்போது பிரதேசத்திலும் அக்கட தேசத்தில் சின்ன சின்ன குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போதைக்கு அக்கட தேசத்தில் அந்த நடிகருக்கு நெகட்டிவ் ரோலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் நடிகைக்கு சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லை. ஆனால் சென்னையில் முன்னணி நடிகை ஒருவர் தங்கியிருக்கும் விலையுயர்ந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இந்த மார்க்கெட் இல்லாத இளம் நடிகையும் ஒரு வீடு வாங்கி விட்டாராம்.
இது அந்த முன்னணி நடிகைக்கு சந்தேகத்தை கிளப்பி விட்டதாம். சந்தேகப்பட்டு கொண்டிருக்கும்போதே அருகில் இன்னொரு வீட்டையும் வாங்கிவிட்டாராம் அந்த இளம் நடிகை. எப்படி வாய்ப்பு இல்லாமல் கோடி கோடியாக சொத்து சேர்த்து வருகிறார் என அந்த முன்னணி நடிகை கிளப்பி விட தற்போது கோலிவுட் வட்டாரங்களில் அந்த இளம் நடிகை மீது தவறான பார்வை ஏற்பட்டு விட்டதாம். அவரோ என் காதலர் சம்பாதிக்கிறார், நான் வாங்குகிறேன், இவளுக்கு என்ன? என்று செம டென்ஷனில் உள்ளாராம்.