புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தளபதியுடன் நடிப்பது தான் எனது நீண்ட நாள் கனவு.. வெளிப்படையாக கூறிய தனுஷ் பட நடிகை

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ராசி கண்ணா. முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உருவாகினார்கள்.

இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத்தமிழன், விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா உள்ளிட்ட படங்களில் ராசி கண்ணா நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது ராசி கண்ணா தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அந்த வரிசையில் இவர் நடிப்பில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக துக்ளக் தர்பார் படமும், ஆர்யாவிற்கு ஜோடியாக அரண்மனை 3 படமும் முடிவடைந்து விரைவில் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

இதுதவிர தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பழம் படத்திலும், கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் இரண்டு படங்களும், மலையத்தளத்தில் ஒரு படமும் கைவசம் வைத்துள்ளார் ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருவதால், மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

raasi-khanna-cinemapettai-2
raasi-khanna-cinemapettai-2

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராசி கண்ணாவிடம் நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராசி கண்ணா, “தளபதி விஜயுடன் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன். அவர் படத்தில் நடிப்பது எனது நீண்ட நாள் கனவு” என கூறியுள்ளார். இவரது நீண்ட நாள் கனவு நிறைவேறுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Trending News