திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சூர்யா, கார்த்தி இரண்டு பேர் படத்தையும் ஒரே நேரத்தில் உசார் செய்த நடிகை.. கேரளா குட்டி கேரளா குட்டிதான்!

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான வாரிசு நடிகர்களாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. பல வாரிசு நடிகர்கள் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறி வந்த காலகட்டங்களில் தங்களுடைய தனித்துவமான நடிப்பால் பல ரசிகர்களை உருவாக்கினர்.

இன்றுவரை வெற்றிகரமான நடிகர்களாக வலம் வருகின்றனர். சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு சூரரைப் போற்று என்ற படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளார். அதேபோல் கார்த்தியும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்தி அடுத்ததாக பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் வயதான தோற்றத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.

அதேபோல் சூர்யாவும் தற்போது கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி வரும் பெயரிடப்படாத படம் ஒன்றில் மலைவாழ் மக்களுக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களிலும் நாயகியாக நடிக்க சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் நாயகி ரஜிஷா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரும் தமிழ் சினிமாவுக்கு வந்த கேரள வரவு தான்.

கர்ணன் படத்தில் ரஜிஷாவின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்துப்போக தற்போது தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களை தன் வசமாக்கி வருகிறார். அடுத்தடுத்த வருடங்களில் மேலும் தமிழில் பல படங்களில் இவரை எதிர்பார்க்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

rajisha-vijayan-cinemapettai
rajisha-vijayan-cinemapettai

Trending News