திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ஓவர் பேச்சால் சிக்கலில் மாட்டிக் கொண்ட இளம் நடிகை.. கட்டம் கட்டிய தயாரிப்பாளர்கள்

சினிமாவை பொறுத்தவரை புகழின் உச்சியில் இருக்கும் பிரபலமான நபர்கள் கூட ஒரு விஷயத்தை பேசும்போது நன்றாக யோசித்து தான் பேசுவார்கள். ஏனென்றால் அவர்களுடைய பேச்சு பல எதிர்வினைகளை சந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதனாலேயே பல பெரிய நடிகர்கள் கூட பத்திரிக்கையாளர்களிடம் யோசித்து பேசுவார்கள். அப்படி இருக்கும் போது சமீபத்தில் வெளியான திரைப்படம் மூலம் புகழ்பெற்றுள்ள அந்த இளம் நடிகை ஆர்வக்கோளாறில் பேசிய பேச்சு பல எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட மக்களை பற்றி நடிகை அவ்வளவு ஓப்பனாக பேசியது பல எதிர்ப்புகளை கிளப்பி உள்ளது. இதனால் நடிகைக்கு எதிராக வழக்குகள் தொடரும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்காக நடிகை மன்னிப்பு கேட்டும் பிரச்சனை மட்டும் இன்னும் ஓயவில்லை.

மேலும் நடிகையை தங்கள் படங்களில் புக் செய்ய வேண்டாம் என்று சில தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். ஆரம்பத்திலேயே இவ்வளவு ஓவராக பேசும் நடிகை இன்னும் வாய் துடுக்காக ஏதாவது பேசினால் அது அவர் நடிக்கும் படங்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் தான் இந்த முடிவாம்.

இதனால் அதிர்ந்து போன நடிகை தற்போது கைநழுவி போகும் பட வாய்ப்புகளால் ரொம்பவும் டென்ஷனில் இருக்கிறாராம். தெரியாமல் பேசிய பேச்சுக்கு இப்படி பல பிரச்சினைகள் கிளம்பும் என்று எதிர்பார்க்காத நடிகை தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டாராம்.

இருப்பினும் அவரை வைத்து படம் எடுத்த அந்த புதுமை இயக்குனர் நடிகைக்கு ஆதரவாக இருந்து வருகிறாராம். மேலும் திறமையான நடிகை, ஏதோ தெரியாமல் பேசிவிட்டார் என்று மற்ற தயாரிப்பாளர்களிடம் அவர் சப்போர்ட் செய்து வருவதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

Trending News