முன்னாள் நடிகை ஒருவரின் மகளும் இன்னாள் நடிகையுமான பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய இளம் காதலருடன் கோவாவில் குடியும் கூத்துமாக கொண்டாட்டமாக இருக்கும் செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக உள்ளது.
இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இந்திய சினிமாவையே ஆட்சி செய்தவர்தான் அந்த முன்னாள் நடிகை. அந்த நடிகையின் அழகில் மயங்காதவர்களே கிடையாது. அதுமட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பல படங்களில் ஜோடி போட்ட ஒரே நடிகையும் அந்த முன்னாள் நடிகை தான்.
பாவம், சமீபத்தில் ஒரு விழாவுக்கு சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து தற்போது அந்த முன்னாள் நடிகையின் மகளும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். வாரிசு நடிகை என்ற பெயருடன் வலம் வரும் அந்த நடிகை வெறும் இரண்டு படங்கள்தான் நடித்துள்ளார்.
அதற்குள் பிரபல இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருவரையும் தனிமையில் நிறைய இடங்களில் பார்த்துள்ள கோலிவுட் வாசிகள் தற்போது அதை காதலாக கன்பார்ம் செய்துவிட்டார்களாம்.
அதற்கு காரணம் சமீபத்தில் அந்த நடிகரும் நடிகையும் ஒரு உடை அணிந்து கொண்டு கோவாவில் குடியும் கூத்துமாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுதான்.
ஏற்கனவே இருந்த அந்த முன்னாள் நடிகை காதல் என்ற வலையில் அந்த பிரபல தயாரிப்பாளரை மயக்கி அவர்களின் குடும்பத்தை சிதைத்து சீரழித்து முன்னாள் மனைவியுடன் விவாகரத்து பெற வைத்து பின்னர் அவருடன் குடும்ப வாழ்க்கை நடத்தியதாக கூட சமீபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.