சமீபகாலமாக விஜய் பட வாய்ப்பு என்றாலே நடிகைகள் பலரும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்து விட்டனர். அதற்கு காரணம் விஜய் படங்களில் நடிகைகளுக்கு கொஞ்சம் கூட முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதுதான்.
சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட மாளவிகா மோகனனுக்கு பெரிய அளவு காட்சிகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் கமர்சியல் படங்களுக்கு கதாநாயகியை வேண்டாம் எனும் அளவுக்கு ரசிகர்கள் வெறுத்து போய் விட்டனர்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் தளபதி விஜய். தளபதி 65 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான் பிரபல முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் வாரிசான தன்யா ரவிச்சந்திரனிடம் தளபதி 65 படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுள்ளனர். சின்ன கதாபாத்திரம் என்றால் சம்மதிக்க மாட்டார் என தெரிந்து கொண்டு முக்கியமான கதாபாத்திரம் என கூறினார்களாம்.
சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்திற்காக பேட்டி கொடுத்த அனைத்து நட்சத்திரங்களுக்கும் படத்தில் ஒரு சின்ன சீன் கூட கிடையாது என்பதை தெரிந்துக்கொண்ட தன்யா ஆளை விடுங்க சாமி என ஓடி விட்டாராம். தன்யா ரவிச்சந்திரன் கருப்பன், பலே வெள்ளையத்தேவா போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக புலி படத்தில் கூட தளபதி விஜய்யுடன் நடித்தால் கேரியர் பெரிய அளவில் ஹிட்டாகும் என நம்பி பிளாஷ்பேக்கில் வரும் விஜய்க்கு மனைவியாக நந்திதா ஸ்வேதா என்பவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.