திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

மூணு பொண்டாட்டி கதையில இனி நடிக்க மாட்டேன்.. ரொம்ப கறார் காட்டும் நடிகை

சின்னத்திரை நடிகைகள் எல்லாம் தற்போது வெள்ளித்திரைக்கு படையெடுத்து வர ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அப்படி வரும் நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அப்படி ஒரு நிலைமை தான் தற்போது பிரபல சின்னத்திரை நடிகைக்கு ஏற்பட்டுள்ளது.

பிரபல சேனலின் ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் அந்த நடிகை. அழகும், கவர்ச்சியும் இருந்தால் போதும் பிரபலம் ஆகி விடலாம் என்று நினைத்த நடிகை ரசிகர்களை கவர பல கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

அதற்கு பலனாகத் தான் அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளாத நடிகை பார்வையாளர் போன்று அந்த வீட்டில் இருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருப்பினும் அவருக்கு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்தப் படத்தின் மூலம் பிரபலமாகி விடலாம் என்று எதிர்பார்த்த நடிகைக்கு மூன்று மனைவிகளில் ஒருவராக நடிக்கும் வேடம் தான் கிடைத்தது. ஆனாலும் பெரிய நடிகரின் படம் என்பதால் நடிகை மறுக்காமல் நடித்துக் கொடுத்தார்.

இதன்பிறகு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நடிகைக்கு அதிர்ச்சி தரும் விதமாக சிறுசிறு வாய்ப்புகளே கிடைக்கிறதாம். இப்படி இருந்தால் சினிமாவில் வளர முடியாது என்று யோசித்த நடிகை தனக்கு வரும் அந்த வாய்ப்புகளை எல்லாம் மறுத்து வருகிறாராம்.

மேலும் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் இதுபோன்ற சின்ன கேரக்டரில் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதே பெரிது, அதில் இப்படியெல்லாம் கண்டிஷன் போட்டால் எப்படி முன்னேற முடியும் என்று நடிகையின் இந்த செயலை பார்த்து பலரும் பேசி வருகின்றனர்.

Trending News