திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

திருமணத்தை நிறுத்திய இளம் நடிகை.. முடிவுக்குப் பின்னால் இருக்கும் பெரிய காரணம்

தமிழ் சினிமாவில் விவாகரத்து, திருமண முறிவு போன்ற விஷயங்களை இப்போது அதிக அளவில் கேட்க முடிகிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு இளம் நடிகையும் இணைந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் அறிமுகமானார் அந்த இளம் நடிகை.

படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை என்றாலும் நடிகைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. இதன் மூலம் அவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த வேளையில் திடீரென தன்னுடைய திருமண அறிவிப்பை கொடுத்து பலரையும் அதிர்ச்சிபடுத்தினார் அந்த நடிகை.

இவ்வளவு இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகும் அந்த நடிகையை பலரும் வியப்பாக தான் பார்த்தனர். ஆனால் தற்போது அந்த திருமணம், நிச்சயதார்த்தம் நடந்த கையோடு முடிவுக்கு வந்துள்ளது.

நடிகை தன்னுடைய திருமணத்தை திடீரென நிறுத்தியது பற்றிதான் தற்போது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் நடிகை ஜோடியாக நடித்த அந்த நடிகருக்கும், இந்த விஷயத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என்ற ரீதியில் செய்திகள் உலா வந்தது.

ஏனென்றால் திரையுலகில் ஏதாவது ஒரு நடிகை விவாகரத்து பற்றி அறிவித்தால் அதற்கு பின்னணியில் அந்த நடிகர் தான் இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லையாம். அதற்குப் பின்னால் வேறு ஒரு பலமான காரணமும் சொல்லப்படுகிறது.

அதாவது நடிகை தற்போது மாஸ் நடிகரின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கண்டிசன் போட்டு தான் நடிகை நிச்சயதார்த்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அப்போது சரி என்று தலையாட்டிய மாப்பிள்ளை வீட்டார் இப்போது நடிக்கக்கூடாது என்று கறாராக சொல்லி விட்டார்களாம். அதனால் இது வேலைக்காகாது, கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்பதற்காக நடிகை தன்னுடைய திருமணத்தை நிறுத்தி இருக்கிறார். கூடிய விரைவில் நடிகை மாஸ் நடிகரின் படத்தில் இணைய போகும் அந்த அறிவிப்பு வெளிவரலாம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Trending News