செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சிவகார்த்திகேயன் படத்துல நடிச்சது தப்பா போச்சு.. எல்லாரும் அதுக்கே கூப்பிடறாங்க என புலம்பும் நடிகை

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதை நினைத்து தற்போது இளம் நடிகை ஒருவர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்து தற்போது சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக உருவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் ஹீரோவாக மாறி தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்துமே குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கும் வகையில் அமைந்து வருவதால் இவரது படங்களுக்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. அதை வைத்து தன்னுடைய சம்பளத்தையும் இரட்டிப்பாக்கி விட்டார்.

அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் படங்களில் நாயகியாக நடிக்கும் நடிகைகள் பலரும் முன்னணி கதாநாயகிகளாக மாறி வருகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயனுடன் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் தான் அந்த படத்தில் நடித்தேனோ என தலையில் அடித்துக் கொள்ளாத குறைதானாம்.

சிவகார்த்திகேயன் மற்றும் பாண்டிராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு பெரிய நடிகையாக வலம் வருவார் என்று பார்த்தால் முன்னணி நடிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ராஜேஷை தங்கச்சி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்து வருகின்றனர். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அதே கதைதான். சமீபத்தில் தெலுங்கு நடிகர் நானி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்ததை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க உள்ளாராம்.

aishwarya-rajesh-cinemapettai
aishwarya-rajesh-cinemapettai

Trending News