தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் எல்லாம் வியந்து பார்க்கும் அளவிற்கு டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது அந்த இளம் ஹீரோவின் மார்க்கெட். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த ஹீரோ. தற்போது அவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் கோடிக்கணக்கில் வசூலை குவித்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்து பெரிய நிறுவனங்களின் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
இந்நிலையில் சூப்பர் நடிகரும் தான் நடிக்கும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் நடிகர் தான் நடிக்கும் படங்களில் எல்லாம் சூப்பர் நடிகரின் ரெபரன்ஸை வைத்து அவரை இம்ப்ரஸ் செய்து வருகிறார்.
அதற்கு கிடைத்த பலனாகத்தான் தற்போது அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக சூப்பர் நடிகர் தன்னுடைய மருமகனுக்கு பல உரிமைகளை கொடுத்து சினிமாவில் ஒரு இடத்தை உருவாக்கிக் கொடுத்தார்.
ஆனால் அவர் தற்போது விவாகரத்து என்ற பெயரில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் இழந்துள்ளார். தற்போது அந்த இடத்தைதான் இளம் ஹீரோ பிடித்து விட்டதாக பலரும் பேசி வருகின்றனர். கோலிவுட்டின் எதிர்காலமே இப்போது அவர் கையில்தான் இருக்கிறது என்று கூறும் அளவுக்கு அவரின் படங்கள் சக்கை போடு போட்டு வருகிறது.
இதில் சூப்பர் நடிகரும் அவருக்காக சில வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்ததும் அவருடைய இந்த வளர்ச்சிக்கு காரணமாக சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் அந்த இளம் ஹீரோ தற்போது அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது தான் உண்மை. இப்போது அவரைப் பற்றிதான் கோலிவுட் வட்டாரமே ஆச்சரியமாக பேச்சு வருகிறது.