பத்து தல படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் கர்நாடகாவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இன்று 2-வது கட்ட ஷூட்டிங் சென்னையில் ஆரம்பமாகிவிட்டது. இந்த இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் சிலம்பரசனும் இணைந்து விட்டார், இந்த படத்தில் மற்றுமொரு முக்கியமான கேரக்டரில் நடிக்கும் கௌதம் கார்த்திக் செப்டம்பர் மாத நடுவில் இந்த படக்குழுவுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் பத்து தல படத்தை, சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களில் சிம்புவின் தந்தை மற்றும் இயக்குனரான டி ராஜேந்தர் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிம்பு அமெரிக்கா சென்றுவிட்டார், அதனால் சில நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்தப் பட ஷூட்டிங்கில் சிம்பு மட்டுமே இணைந்திருக்கிறார். கௌதம் கார்த்திக் செப்டம்பர் மாத நடுவில் இணைவார் என்று படக்குழு அறிவித்திருக்கிறது, மேலும் பிரியா பவானி சங்கர் விரைவில் படக்குழு உடன் இணைந்து விடுவார் எனவும் தெரிவித்துள்ளனர் . சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கருக்கு இது தான் முதல் முதலில் மிகப்பெரிய நிறுவனத்துடன் கை கோர்க்கும் படம், மேலும் இந்த படத்தில் இவர் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார்.
கௌதம் கார்த்திக்கு இந்த படம் ஒரு ரீ என்ட்ரி என்றே சொல்லலாம். 2019 ஆம் ஆண்டு வெளியான தேவராட்டம் படத்திற்குப் பிறகு கௌதம் கார்த்திக் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவர் சமீபகாலமாக அடல்ட் ஓரியன்டல் படங்களில் நடித்து தன் பெயரை கெடுத்துக் கொண்டார். இது ஒரு மிக நீண்ட இடைவெளி, 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கௌதம் கார்த்திக் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். எனவே இந்தப் படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகவே அமைந்துள்ளது. இந்த படத்தில் அவர் ஒரு புதிய லுக்கில் இருப்பதுபோல் ட்விட்டரில் போட்டோ பகிரப்பட்டுள்ளது, இன்னும் அவரது கேரக்டரை பற்றி தெளிவாக எந்த தகவலும் சொல்லப்படவில்லை.
இந்தப் பட சூட்டிங்கிற்கு இடையில் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்திற்காக டப்பிங் வேலையையும் கையோடு முடித்துள்ளார். வெந்து தணிந்தது காடு அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் கிருஷ்ணா விற்கும் இது ஒரு கம்பேக் என்று தான் சொல்ல வேண்டும். 2006ஆம் ஆண்டில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த சில்லென்று ஒரு காதல் படத்தை இயக்கிய இவர் அதோடு எட்டு ஆண்டுகள் கழித்து 2014ஆம் ஆண்டு தான் நெடுஞ்சாலை படத்தை இயக்கினார், அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்தே ஹிப்பி என்னும் படத்தை இயக்கினார், அடுத்த 5 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை இயக்குகிறார்.
கிருஷ்ணா தான் இயக்கிய நெடுஞ்சாலை மூலம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கூறி மிகப் பெரிய வெற்றி அடைந்தார். இவரது பத்து தல படம் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், சிம்பு என அனைவருக்குமே அவர்களது சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டம் நோக்கி எடுத்துச்செல்லும் படமாகவே பார்க்கப்படுகிறது.