வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

முத்தையா யூனிவர்சில் இணைய மறுக்கும் இளம் ஹீரோக்கள்.. பாட்சாவை பார்த்து தெறிந்து ஓடிய கொடுமை

கொம்பன் முத்தையாவிற்கு என்று ஒரு பெயர் இருந்து வந்தது. இப்பொழுது காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தால் அந்தப் பெயர் பெரிதும் அடிவாங்கியுள்ளது. படம் மூன்று நாள் கூட தியேட்டரில் ஓடவில்லை. போஸ்டர் ஒட்டிய காசு கூட வசூலிக்கவில்லை என கலாய்த்து வருகின்றனர்.

கேப்டன் படத்திற்கு பிறகு ஆர்யா அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் நடித்த ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. முத்தையா சினிமாடிக் யுனிவர்சில் குட்டி புலி, கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, விருமன் இந்த லிஸ்டில் இப்போது காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படமும் சேர்ந்துள்ளது.

Also Read: வெயில் கொடுமைக்கு உள்ள போனா ஆர்யாவின் அலப்பறை தாங்கல.. 20% வசூலை கூட தொட முடியாமல் கதறவிட்ட காதர் பாட்ஷா

கிராமத்துக் கதை களத்துடன் கதாநாயகனை கிராமத்தானாகவே காட்டக் கூடியவர் தான் முத்தையா. எல்சியு எல்லாம் இப்ப வந்தது, இதற்கு முன்பே எம்சியு என்ற ‘முத்தையா சினிமாடிக் யுனிவர்ஸ்’ எல்லாம் எப்பயோ வந்துவிட்டது .முத்தையா இதுவரை கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். இதையெல்லாம் ஒரே மாதிரியான டெம்ப்லேட்டில் உருவாக்குவது தான் ரசிகர்களை கடுப்பேற்றுகிறது.

இந்த படத்துக்கு ஆர்யாவோட சம்பளம் 14 கோடி, முத்தையாவுக்கு மூன்றரை கோடி. ஆனால் படம் ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களில் 3 கோடி கூட வசூலிக்கவில்லை. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படத்திற்கு, இப்படி வசூல் வந்தால் எப்படி போட்டு காசை எடுக்க முடியும் என தயாரிப்பாளர் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கின்றனர்.

Also Read: லோகேஷை தொடர்ந்து குட்டி பவானியை சரியாக பயன்படுத்திய முத்தையா.. காதர் பாட்ஷாவில் நடந்த தரமான சம்பவம்

முத்தையா படம் என்றால் முதலில் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் காதர் பாட்ஷா படத்தை பார்த்த பிறகு தலை தெறிக்க ஓடுகின்றனர். இதனால் அடுத்து அவர் கமிட் பண்ணி வைத்திருந்த ஹீரோக்கள் எல்லோரும் யோசிக்கின்றனர். விஷால், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி போன்ற ஹீரோக்கள் கொம்பன் முத்தையா இப்படி சொதப்பிவிட்டார் என்று யோசித்து அவருடைய படத்திலிருந்து விலக பார்க்கின்றனர்.

ஆனால் இதற்கு முன்பு இவர்கள் முத்தையா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை ஆசையாய் கமிட் ஆனார்கள். இப்போது நிலைமையில் தலைகீழாக மாறிவிட்டது. ஆர்யாவிற்கு கிடைத்தது அடுத்தது நமக்கு கிடைக்கும் என்று நடிகர்கள் முத்தையாவை ஒதுக்கி வருகின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் முத்தையா ஏதாவது ஒரு நடிகரின் கைல கால்ல விழுந்தாவது வாய்ப்பைப் பெற்று தன்னை மீண்டும் நிரூபித்தாக வேண்டிய என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

Also Read: ஆர்யா நடித்த முதல் படத்திலிருந்து சொக்கி போன இளசுகள்.. ஒரே படத்தால் வளர்ந்த 4 நட்சத்திரங்கள்

Trending News