புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சீனியர் நடிகையின் பின்னால் சுற்றும் இளம் ஹீரோக்கள்.. உஷாராக எஸ்கேப்பாகும் ஆன்ட்டி

Gossip: ஒரு காலத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் எல்லாம் இப்போது அம்மா கேரக்டருக்கு ப்ரமோஷன் ஆகிவிட்டார்கள். அதிலும் இரண்டு, மூன்று நடிகைகள் தான் இப்போது டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகின்றனர்.

அதில் எதார்த்தத்திற்கு பெயர் போன அந்த நடிகைக்கு தான் டிமாண்ட் அதிகம். காமெடி சென்டிமென்ட் என கலக்கும் அந்த நடிகை மிகப்பெரும் இயக்குனர் ஒருவரின் படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

அது அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோயின் ஆக நடித்தார். ஆனால் கவர்ச்சிக்கு நோ சொன்ன காரணத்தால் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

டென்ஷனில் இருக்கும் சீனியர் நடிகை

இதனால் சினிமா பிரபலம் ஒருவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு பிரேக் விட்டார். குழந்தை குட்டி என இருந்த அவர் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் நடிப்பையும் விடாமல் தொடர்ந்து வருகிறார்.

தற்போது பல படங்களை கையில் வைத்திருக்கும் இவருக்கு சமீப காலமாக ஒரு பிரச்சனை தலைகாட்டி வருகிறதாம். அதாவது இவருக்கு மகனாக நடிக்கும் இளம் ஹீரோக்கள் இவரிடம் வரம்பு மீறி சேட்டை செய்கிறார்களாம்.

இதனால் கடுப்பான சீனியர் நடிகை அவர்களை திட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனாலும் இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருவதால் நடிகை கடும் டென்ஷனில் இருக்கிறாராம். அம்மா நடிகையை கூட விடமாட்டாங்க போல என இந்த கதையை கேட்ட திரையுலகினர் சத்தம் இல்லாமல் புலம்பி வருகின்றனர்.

அம்மா நடிகையை டார்ச்சர் செய்யும் ஹீரோக்கள்

Trending News