திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

தொடரும் அடுத்தடுத்த தோல்விகள்.. விரக்தியில் நடிகை எடுத்த அதிரடி முடிவு

சினிமாவை பொறுத்தவரை வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். அந்த வகையில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த அந்த வாரிசு நடிகை தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்.

தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக இருந்த அந்த நடிகை தற்போது தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு நடிகை நடித்த சுயசரிதை திரைப்படம் அவருக்கு எதிர்பாராத அளவிற்கு பேரையும், புகழையும் கொடுத்தது.

அதன் பிறகு அவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் அப்படி அவர் நடித்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. சமீபத்தில் நடிகை வெறித்தனமாக நடித்திருந்த அந்த திரைப்படமும் தோல்வியடைந்து அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

மேலும் பிரபல தெலுங்கு நடிகருடன் ஜோடி போட்டு நடித்த படமும் காலை வாரிவிட்டது. இதனால் நடிகை மிகவும் மனவருத்தத்துடன் இருக்கிறாராம். நடிகையின் வீட்டிலும், நடித்தது போதும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகு என்று கூறி வருகிறார்களாம்.

இதனால் யோசித்த நடிகை தற்போது வேறு பக்கம் தன் கவனத்தைத் திருப்பி இருக்கிறார். அதாவது நடிகை தற்போது பல இடங்களிலும் ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கிப் போட்டு வருகிறாராம். இதைப்பார்த்த நடிகையின் நண்பர்கள் ரியல் எஸ்டேட் பிசினஸ் எல்லாம் நமக்கு ஒத்துவராது என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால் நடிகையோ அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பெரிய பெரிய பண்ணைகளை உருவாக்கப் போவதாக கூறியிருக்கிறார். மேலும் அவர் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார். தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த நடிகைக்கு தற்போது இதுதான் ஆறுதலாக இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர்.

Trending News