வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

88 வயதிலும் இளமை & ஸ்டைல்.. சல்மான்கானின் புகைப்படம் வைரல்.. இத்தனை லட்சம் லைக்குகளா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பகிர்ந்த ஒரு புகைப்படம் தான் ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினர் பேச்சாக இருக்கிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் சல்மான் கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னும் அவர் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து நடித்து வருகிறார். நடிப்பு, சினிமா வியாபாரத்தில் மட்டுமல்ல. நடிகர்களில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்களில் அவரும் ஒருவர்.

இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவரது ஒவ்வொரு படமும் திருவிழாதான் ரசிகர்களுக்கு. சமீபத்தில் அவர் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம் சிங்கம் அகெய்ன். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சினிமாவிலும் பிஸினஸிலும் தொடர்ந்து பிசியாக வலம் வரும் சல்மான் கானுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோயிடம் இருந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது சினிமாத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தன் பாதுகாப்பை அதிகரித்துள்ள அவர், குண்டுதுளைக்காத காரில் பயணித்து வருகிறார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஷூட்டிங்கில், உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். 58 வயதிலும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த போதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து, அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

தந்தையுடன் சல்மான் கான் எடுத்த புகைப்படம் வைரல்

இந்த நிலையில் சல்மான் கானின் தந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சல்மான் கானின் தந்தை, பாலிவுட் சினிமாவின் மூத்த திரைக்கதை எழுத்தாளர்களுள் ஒருவர்.

அவர் பெயர் சலீம் அப்துல் ரஷீத்கான். இந்தி சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்றும், உலகின் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாக ஷோலோ படத்தை குறிப்பிடுவர். இப்படத்தின் கதை ஆசிரியாக சலீம் கான் பணியாற்றினார்.

தற்போது 88 வயதாகும் சலீம் நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை. இந்த நிலையில் சலீம் கான் முதலில் வாங்கிய பைக் டிரையம்ப் டைகர் 100. இதை 1956 ஆம் ஆண்டில் தனது 20 வயதில் சலீம் கான் வாங்கினார். இன்னும் இந்த பைக்கை 68 ஆண்டுகளாக சல்மான் குடும்பத்தினர் பராமரித்து வரும் நிலையில், சலீம் கான் அவரது மகன் சல்மான்கான் இருவரும் இந்த பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சல்மான் கானின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாவில் அவர் இதைப் பகிர்ந்திருந்த நிலையில், இந்த புகைப்படத்தை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 88 வயதிலும் சலீம் கான் , அவரது மகன் சல்மானுக்கு டஃப் கொடுப்பது போன்று இளமையுடன் இருப்பதாக பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர்.

Salman-Khan-and his father

Trending News