விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 90ஸ் கிட்ஸ் இன் நினைவளைகளை தூண்டும் விதமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் குட்டி திரிஷா அதாவது பள்ளிப் பருவ ஜானு கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் கௌரி ஜி கிஷன்.
இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் மற்றும் விஜயின் மாஸ்டர் படங்களிலும் கௌரி ஜி கிஷன் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு பள்ளி மாணவி போல் இருக்கும் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
Also Read : சூது கவ்வும் ஸ்டைலில் உருவாகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. ஜோடியாகும் பாலிவுட் நடிகை
அதேபோல் புத்தம் புது காலை விடியாதா என்ற அந்தலாஜி படத்தில் குயிலியாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். மிகுந்த திறமையான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் தாராள கவர்ச்சி தரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் இருக்கின்றனர். அந்த வகையில் கௌரி கிஷன் சமீபத்தில் மாலத்தீவு சென்று இருக்கிறார். அங்கு புலி தோல் போன்ற உடை அணிந்து மிகவும் கவர்ச்சியுடன் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் குட்டையான உடை என விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
Also Read : கமலை போல விஜய் சேதுபதிக்கு நடக்கும் சதி, சேற்றை வாரி இறைக்கும் பாலிவுட்.. இதே பொழப்பாகத் திரியும் பிரபலம்
இதை பார்த்த ரசிகர்கள் குட்டி ஜானு பிஞ்சிலேயே பழுத்து விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனாலும் சமீபகாலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சில நடிகைகள் வாய்ப்புக்காக எல்லை மீறிய கவர்ச்சி காட்டுவதை தொடர்ந்து பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் திறமையை காட்டிலும் கவர்ச்சிக்காக பட வாய்ப்பு வருகிறது என்ற எண்ணம் தான்.
ஆனாலும் குழந்தையாக இருக்கும்போதே சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவர்கள் இன்னும் கவனம் செலுத்தினால் நல்ல கதாபாத்திரங்கள் நிச்சயம் வரும். மேலும் கௌரி ஜி கிஷன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை தற்போது அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
Also Read : விடாமுயற்சிக்காக திரிஷா இடத்தை தட்டி பிடித்த ஐட்டம் நடிகை.. யாருதான் அஜித்துக்கு ஜோடி