செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

உங்க பங்ஷனால் போலீசுக்கு தான் தலைவலி.. ரசிகர்கள் செய்த வேலையால் தில் ராஜிக்கு வந்த நெருக்கடி

பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24 ஆம் தேதி என்று உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான ஏற்பாடுடன் நடத்தப்பட்டது. இந்தப் படத்தை தயாரித்த தில் ராஜு ஏற்கனவே தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன், அவருக்கு தான் அதிக ஸ்கிரீனிங் கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனால் கொந்தளித்த அஜித் ரசிகர்கள் தளபதி ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் மல்லு கட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் சென்னை மாநகர போலீசுக்கு பெரிய தலைவலியை தந்துவிட்டது.

Also Read: தளபதி 67க்கு மொத்த ஃபிளானும் ரெடி.. ஆறு மாசம் அட்ராசிட்டி பண்ண போகும் லோகேஷ், விஜய்

மேலும் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் டிக்கெட் விலையை கேட்டால் தலையை சுத்துகிறது, ஏனென்றால் ஒரு டிக்கெட்டின் விலை மட்டும் யானை விலை குதிரை விலையாக இருந்தது. அதாவது ஒரு டிக்கெட்டின் விலை 4000 முதல் 5000 வரை வசூலிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அத்துடன் நேரு ஸ்டேடியத்தில் 6000 இருக்கைகள் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் டிக்கெட் அதிகப்படியாக விற்றுள்ளனர். அதனால் வெளியே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசுக்கும் ரசிகர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உள்ளே இருக்கைகள் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

Also Read: அந்த ஒரு விஷயத்தில் தான் ஜாதி கிடையாது.. வாரிசு ஆடியோ லான்ச்சில் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு

ரசிகர்கள் போலீஸ் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவமும் அரங்கேறின.

விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள்தான் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் ரிலீசுக்கு முன்பே தளபதி ரசிகர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் இருப்பதால் படம் ரிலீஸ் ஆகும் தினத்தில் என்னென்ன கூத்து நடக்கப் போகிறதோ என்றும் போலீசார் பெரும் தலைவலியில் உள்ளனர்.

Also Read: 32 வருஷமா விஜய்க்கு போட்டி இவர்தான்.. வாரிசு ஆடியோ லான்ச்சில் தெறிக்க விட்ட பேச்சு

Trending News