வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உனக்கு என்னடா உங்க அப்பா ஹீரோ, நீ இயக்குனர் கலெக்ஷன் அள்ளிடலாம்.. எஸ்ஏசி-க்கு மறுப்பு தெரிவித்த விஜய்யின் வாரிசு

Actor Vijay: வசூல் நாயகனாக ஆல் ரவுண்டில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய், தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் மூலம் இவருடைய மொத்த மார்க்கெட் ரேஞ்சும் வேற லெவல்ல மாறப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் இவருடைய வாரிசாக இவரது மகனும் சினிமாவில் இயக்குனராக நுழைந்துவிட்டார். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் கன்னடாவில் திரைப்பட இயக்குனர் சம்பந்தமான படிப்பை முடித்திருக்கிறார். கூடிய விரைவில் இயக்குனராக அறிமுகமாகிவிடுவார் என்று எதிர்பார்த்து நிலையில், தற்போது பெரிய தயாரிப்பு நிறுவனமான லைக்கா உடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also read: விஜய் டிவி, சன் டிவி சீரியல் நடிகையை புரட்டி எடுக்க நினைத்த தயாரிப்பாளர்.. பகீர் கிளப்பிய சமீபத்திய பேட்டி

இதனைத் தொடர்ந்து இவரின் வளர்ச்சியை பார்த்து பூரிப்பில் இருக்கிறார் இவருடைய தாத்தா எஸ்ஏசி. இவர், பேரனிடம் உனக்கு என்னடா நீ தற்போது இயக்குனராக வந்து விட்டாய், அதுவும் உன் கண் முன்னாடியே சூப்பர் ஸ்டார் ஆக உங்க அப்பா வளர்ந்து இருக்கிறார். இவரை வைத்து நீ எடுத்தால் கண்டிப்பாக கலெக்ஷனை அள்ளிவிடலாம் அதுதான் தற்போது சினிமாவின் நிலைமை என்று கூறியிருக்கிறார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காதபடி விஜய்யின் மகன், தாத்தாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது நான் இயக்குனராக ஆனதும் முதன் முதலில் விஜய் சேதுபதியை வைத்து தான் படம் எடுப்பேன் என்று கூறி இவருடைய தாத்தாவின் எதிர்பார்ப்பிற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். ஆனாலும் இதை பெருமையாகவே எடுத்திருக்கிறார் எஸ்ஏசி.

Also read: தளபதி 68ல் விஜய் நடிக்கப் போகும் கேரக்டர் இதுதான்.. நான்கு வருடத்திற்கு பின் மீண்டும் தயாராகும் சம்பவம்

அதாவது இதுதான் என்னுடைய ரத்தம், அவருடைய எண்ணமே முதலில் பெரிய இயக்குனர் ஆகி அவருக்கான பெயரை சம்பாதிக்க வேண்டும். அதன்பின் தான் இவருடைய அப்பாவை வைத்து எடுக்க வேண்டும் என்று என்னை மாதிரி என் பேரன் சிந்திக்கிறான் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அத்துடன் கூடிய விரைவில் விஜய்யின் மகன், இயக்குனராக ஜெயிப்பதற்கு தயாராகி விட்டார். அவர் ஆசைப்பட்ட மாதிரி அவருடைய முதல் ஹீரோ விஜய் சேதுபதி வைத்து எடுப்பது உறுதியாகிவிட்டது. இவர்களுடைய கூட்டணியில் வரும் படம் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?

Trending News