புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காத நடிகர்.. பொறாமையால் கண்டதையும் உளறிய பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்து தன்னுடைய திறமையால் முன்னேறிய அஜித் தற்போது தமிழ் திரையுலகின் டாப் நடிகராக இருக்கிறார்.

இவரைப் பற்றி புகழ்ந்து பேசாத பிரபலங்களே இருக்க முடியாது. உடன் நடிக்கும் நடிகைகள் முதல் படத்தில் பணிபுரியும் டெக்னீசியன்கள் வரை அனைவரும் அஜித்தை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசுவார்கள். அப்படியிருக்கையில் ஒரு பிரபலம் மட்டும் அவர் குறித்து பல நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகிறார்.

யூட்யூபில் ஒளிபரப்பாகும் வலைப்பேச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருப்பவர் அந்தணன். இவர் ஒரு பேட்டியில் அஜித் பற்றி நம்பமுடியாத விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு தமிழில் பிரபலமாக இருந்த ஒரு ஹீரோயினை அஜித்தும், மற்றொரு பிரபல நடிகரும் தீவிரமாக காதலித்ததாக கூறியிருக்கிறார்.

அப்போது அஜித் வேண்டுமென்றே அந்த நடிகரின் படப்பிடிப்பு நடந்த இடத்தின் வழியாக அந்த நடிகையுடன் காரில் சென்றதாகவும், இதைப் பார்த்த அந்த நடிகர் கடும் அப்செட்டில் படப்பிடிப்பை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி அவர் அஜித்தை பற்றி பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நடிகர் அஜித்திற்கு திரையுலகில் இதுவரை ஒரே ஒரு நடிகரை மட்டும் பிடிக்கவே பிடிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் அண்ணன், தம்பி நடிகர்களில் அண்ணன் நடிகரை அஜித்துக்கு பிடிக்காது என்று அவர் சூசகமாக கூறியுள்ளார்.

இப்படி அவர் கூறியதை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் தற்போது அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். அவருக்கு அஜித்தை பிடிக்காத காரணத்தால் தான் இப்படி பொய்யான தகவல்களை பரப்பி அவருக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுக்க பார்ப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இப்படி ஒருபுறம் அவருக்கு எதிராக கருத்துக்கள் வந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் ரசிகர்கள் அவர் கூறிய அந்த நடிகர்கள் யார் என்ற தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். அதில் அஜித் காதலித்த அந்த நடிகை ஹீரா என்றும், அவர் வெறுப்பேற்றிய அந்த நடிகர் சரத்குமார் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் சூர்யாவைத்தான் அவர் அண்ணன் நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் பல நிகழ்ச்சிகளில் சூர்யாவும் அஜித்தும் நன்றாக சிரித்து பேசி இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் சூர்யாவின் திருமணத்திற்குக் கூட அஜித் தன் மனைவி ஷாலினியுடன் வந்து வாழ்த்து தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அஜித்தை பற்றி இப்படி ஒரு தகவல்களை கூறிய வலைப்பேச்சு அந்தணனுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

Trending News