வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விஜய்க்கு போன் போட மாட்டேன் ஜிமெயில் தான்.. ப்ளூ சட்டை மாறனின் நக்கல் ட்வீட் யாருக்கு.?

Vijay: சமீப காலமாக ப்ளூ சட்டை மாறன் விஜய் பற்றி அதிக அளவில் விமர்சனம் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக இருக்கும் சர்ச்சையான விஷயங்களுக்கு தன் பாணியில் நக்கலாக ட்வீட் செய்து வருகிறார்.

blue sattai maran
blue sattai maran

அதில் தற்போது அவர் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் குறித்த சில மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார். அதிலும் திரையுலகில் இருக்கும் அனைத்து பிரபலங்களும் உதயநிதிக்கு சோசியல் மீடியா மூலம் வாழ்த்து தெரிவித்துவிட்டனர்.

blue sattai maran
blue sattai maran

அதன்படி சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ், கமல் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு இருந்தனர். ஆனால் ரஜினியிடம் இருந்து மட்டும் எந்த வாழ்த்து செய்தியும் வரவில்லை. இதை ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்திருந்தார்.

ப்ளூ சாட்டையின் நக்கல் பதிவு

எல்லாரும் வாழ்த்து சொல்லிட்டாங்க தற்போது வரை எதுவும் சொல்லாமல் கெத்து காட்டும் தலைவர் காரணம் என்ன என கேள்வி எழுப்பி இருந்தார். அதை அடுத்து ரஜினி உதயநிதிக்கு தொலைபேசி மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

அதையும் கூட ப்ளூ சட்டை மாறன் இப்போது கிண்டலடித்துள்ளார். அப்ப விஜய் ஜெயிச்சா தொலைபேசி மூலம் வாழ்த்து சொல்வீர்களா? என கேட்பது போல் மீம்ஸ் போட்டுள்ளார். அதற்கு வாழ்த்துக்கள்னு ஜிமெயில் அனுப்புவேன் என அவரே ஒரு பதிலும் கொடுத்துள்ளார்.

இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும் அதற்கு அப்புறம் வாழ்த்து சொல்வதைப் பற்றி யோசிக்கலாம் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

ரஜினியை கிண்டல் செய்யும் ப்ளூ சட்டை மாறன்

Trending News