எல்லாம் பணத்திமிரு, அடுத்தவங்க கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா.. நெட்டிசன்களிடம் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

Youtuber Irfan: சமீப காலமாக அடுக்கடுக்காக ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் யூடியூபர் இர்ஃபான். பாட்டியின் மீது கார் மோதியதில் தொடங்கி அவருக்கு குழந்தை பிறந்தது வரை எல்லாமே பஞ்சாயத்து தான்.

ஆனால் பெரிய இடத்து சப்போர்ட் இருப்பதால் எல்லா பிரச்சனையிலிருந்தும் எஸ்கேப்பாகி விடுகிறார். அதே போல் அவருக்கு எல்லாமே கன்டென்ட் தான்.

வீடியோ போட்டு சர்ச்சைகளை கிளப்பி பிறகு மன்னிப்பு கேட்பது இவருக்கு கைவந்த கலை. அப்படித்தான் தற்போது அவர் ரம்ஜானை முன்னிட்டு வறுமையில் தவிப்பவர்களுக்கு உதவி செய்துள்ளார்.

நெட்டிசன்களிடம் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்

சரி இதில் என்ன பஞ்சாயத்து என்று கேட்கலாம். அங்கு தான் விஷயமே இருக்கிறது. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதைக் கூட அவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அது பிரச்சனை இல்லை ஆனால் காருக்குள் இருந்தபடியே பொருட்களை அவரின் குடும்பத்தார் கொடுத்துள்ளனர். அப்போது வெளியில் இருப்பவர்கள் வாங்க முற்படும்போது இர்ஃபான் நடந்து கொண்ட முறை முகம் சுளிக்க வைக்கிறது.

அதிலும் அவருடைய பேச்சில் இருந்த நக்கலும் சிரிப்பும் பணக்கார திமிரும் வீடியோ பார்த்தவர்களை கோபப்பட வைத்துள்ளது. அதை அடுத்து இப்போது கமெண்ட் பாக்ஸில் அவரை நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர்.

இவங்கள தட்டி கேட்க யாரும் இல்லையா, உனக்கு எதிரி நீயேதான். இதுக்கும் ஒரு மன்னிப்பு வீடியோ வரும் என இணையவாசிகள் திட்டி தீர்க்கின்றனர்.