வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஸ்வின் போல ஆணவத்தில் ஆடும் யூடியூபர்.. முதல் படத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கும் மஞ்சள் வீரன்

சினிமாவில் வளர்ச்சி அடையும்போது அடக்கம் மிகவும் தேவை. அந்தச் சமயத்தில் பணிவுடன் நடந்து கொண்டால் கண்டிப்பாக உச்சத்திற்கு செல்வார்கள். அப்படிதான் விஜய், சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் மிகப்பெரிய உயரத்தை அடைந்தாலும் பணிவுடன் இருந்து வருகிறார்கள்.

ஆனால் ஒரு சில படங்கள் கிடைத்த உடனே ஆணவத்தில் பேசினால் அவர்களது சினிமா கேரியரே ஆட்டம் கண்டுவிடும். அப்படி தான் சமீபத்தில் மேடையில் ஆணவத்தில் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார் அஸ்வின். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின்.

Also Read : இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் பெண்.. பிக் பாஸ் போட்டியாளராக லாக் செய்த விஜய் டிவி

இந்நிலையில் தன்னுடைய பட விழாவில் பேசும்போது 30 கதைகளுக்கு மேல் கேட்டு தூங்கிவிட்டேன் என்று ஆணவமாக பேசியிருந்தார். இதனால் அந்த படமும் தோல்வி அடைந்த நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அஸ்வினுக்கு குறைந்தது. இப்படி இருக்கும் சூழலில் யூடியூபர் ஒருவர் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

அதாவது புதுவிதமான மற்றும் விலை உயர்ந்த பைக்குகளில் பல ஊர்களுக்கு சென்று யூடியூப்பில் வீடியோவை பதிவிட்டு வந்து பிரபலமடைந்தவர் டிடிஎஃப் வாசன். இதன் மூலம் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அதிக ரசிகர்களை வாசன் பெற்றிருந்தார். அதுமட்டுமின்றி சில சமயம் பைக்கில் அதிவேகத்தில் சென்று போலீசாரிடம் சிக்கியும் உள்ளார்.

Also Read : விவாகரத்தை ட்ரெண்ட் ஆக்கிய 4 விஜய் டிவி பிரபலங்கள்.. ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண உறவு!

இந்நிலையில் இப்போது படத்தில் கதாநாயகனாக டிடிஎஃப் வாசன் அறிமுகமாகிறார். பொதுவாக பெரிய நடிகர்களை ஆடம்பரம் இல்லாமல் இருக்கும் சூழலில் தனது பிறந்த நாளை முன்னிட்டு மஞ்சள் வீரன் என்ற படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதுவும் இன்றிலிருந்து படப்பிடிப்பு 299 கிலோமீட்டர் வேகத்தில் நடைபெற உள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது.

அதாவது இப்போது தான் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் சமயத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு படத்தை தொடங்கலாம். ஆனால் டிடிஎஃப் வாசன் முதல் படம் தொடங்குவதற்கு முன்பு ஓவர் அலப்பறை கொடுப்பதால் படம் எப்படி இருக்குமோ, அதற்குள் இவ்வளவு பில்டப்பா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

manjal-veeran
manjal-veeran

Also Read : 10 பட வாய்ப்பை வேண்டாம் என உதறிய சூரி.. அஸ்வினை போல் வாயை விட்டு மாட்டிக்கிட்டியே பங்கு

Trending News