தமிழ் சினிமா இருக்கும் வரை இசைஞானி இளையராஜாவின் இசையை யாராலும் அழிக்க முடியாது. அந்த அளவுக்கு இசையால் உலகை மகிழ்வித்தவர். இப்படிப்பட்டவர் இனி அவ்வளவுதான் என்று சொன்னதும் அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவுக்கு எப்படி இருந்திருக்கும்.
என்னதான் இயக்குனர்கள் நடிகர்கள் என அனைவரும் படத்தை செதுக்கி எடுத்தாலும் அதற்கு உயிரோட்டம் தருவது என்னமோ இசைதான். அதையும் யார் கொடுக்கிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இருக்கும்.
ஒரு காலத்தில் இளையராஜா இல்லாத படங்களே கிடையாது. அந்த அளவுக்கு இளையராஜாவின் இசை மோகத்தில் இருந்த பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை தன்னுடைய திறமையின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் இழுத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார் AR ரகுமான்.
அப்போது யுவன் சங்கர் ராஜா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டம். இளையராஜாவின் மகன் என்பதால் அவருக்கு பள்ளியில் சலுகைகள் அதிகமாகவே இருந்தது. முதன்முறையாக இளையராஜா பாடல்களின் சத்தம் குறைந்து ஆர் ரகுமான் பாடல்களின் சத்தம் அதிகமாக கேட்ட காலகட்டம்.
ஒருமுறை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது யுவன் சங்கர் ராஜாவிடம் அவருடைய உறவினர் ஒருவர் உங்க அப்பா அவ்வளவுதான், இனிமேல் எல்லாரும் ஏ ஆர் ரகுமானைத்தான் கொண்டாடப் போகிறார்கள் என கூறினாராம். அதைக் கேட்டதும் யுவன் சங்கர் ராஜாவுக்கு பெருத்த கவலை தொற்றிக்கொண்டது.
இளையராஜாவுக்கு பிறகு அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜாதான் இசை உலகை ஆளுவார் என அனைவருமே நம்பிக்கை கொண்டிருந்தார்களாம். ஆனால் யுவன் சங்கர் ராஜா அவுட்டாப் சிலபஸ் தான். தன்னுடைய அப்பாவின் தரம் குறைந்து விட்டது என்று சொல்லி விட்டார்களே என்ற ஏக்கத்தில் பைலட் ஆசையை தூக்கி வீசிவிட்டு இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.