ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சைன் பண்ணது மறந்து போச்சா மாமா குட்டி.? கிடுக்கு பிடி போட்டு யுவனை மிரட்டிய வில்லன் நடிகர்

Yuvan Shankar Raja: லவ் டுடே படத்திற்கு பிறகு மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. GOAT, ஏழு கடல் ஏழுமலை போன்ற படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் யுவன் தொடர்ந்து நிறைய படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். என்ன தான் பிசியாக இருந்தாலும் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் போட்டது கூடவா மறந்து விடும் என்று இப்போது ரசிகர்கள் அவரை கேள்வி கேட்கும் நிலைமைக்கு ஆளாகி விட்டார்.

யுவன் இசையை இளைஞர்களின் போதைப்பொருள் என்று கொண்டாடினாலும், அனிருத்தின் வளர்ச்சி காலத்தில் யுவன் காணாமல் போனது உண்மைதான். பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த லவ் டுடே படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய இருப்பை நிரூபித்துக் கொண்ட யுவன் சங்கர் ராஜா, சொல்லுங்க மாமா குட்டி பிஜிஎம் மூலம் 2கே கிட்ஸ்களையும் கவர்ந்தார்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு யுவன் மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைப்பது சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் யுவன் சங்கர் ராஜா நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அவருடைய அறிவிப்பு சாதாரணமாக இருந்தாலும், அதற்கு கொடுக்கப்பட்ட பதில் அளித்தான் இப்போது பயங்கரமாக வைரலாகி இருக்கிறது.

Also Read:யுவன் பிஜிஎம்மில் முதல் 5 இடத்தைப் பிடித்த மூவிஸ்.. அஜித்துக்கு போட்டு மரண மாஸ் கிளப்பிய படம்

தாரை தப்பட்டை போன்ற ஒரு சில படங்களில் வில்லனாக நடித்திருந்த நடிகர் ஆர் கே சுரேஷ் நேற்று மதியம் 12:30 மணியளவில் தான் தென்மாவட்டம் என்னும் ஒரு படத்தை இயக்கிநடிக்க இருப்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மாலை 5 மணி அளவில் தென் மாவட்டம் என்ற படத்தில் நான் ஒப்பந்தமானதாக சில தகவல்கள் வெளியாகின்றன. அந்த படத்தில் நான் பணியாற்ற வில்லை என அறிவித்திருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த ஆர் கே சுரேஷ் யுவன் சார் நீங்கள் ஒரு படத்திற்கும், லைவ் கான்செர்ட் நிகழ்ச்சிக்கும் ஒப்பந்தமாகி கையெழுத்திட்டு இருக்கிறீர்கள், அதை சரியாக படித்து பாருங்கள், நன்றி யுவன் சார் என பதிவிட்டு இருக்கிறார். மாமனிதன் படத்திற்கு இவன் ஷங்கர் ராஜா இசை அமைத்த சமயத்தில் அவருக்கு இருந்த நிதி பிரச்சனையை ஆர்கே சுரேஷ் தீர்த்து வைத்ததாகவும், அதற்கு பதிலாக யுவன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் யுவன் எதற்காக தற்பொழுது இதை மறுக்கிறார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. சமீபத்தில் ஆருத்ரா பண மோசடி வழக்கில் ஆர் கே சுரேஷ் சிக்கியது எல்லோருக்கும் தெரியும். இது போன்ற ஒரு சமயத்தில் அவருடன் பணியாற்றுவது சரியாக வராது என்பதால் யுவன் இப்படி சொல்கிறார் என்றும் பேசப்படுகிறது.

Also Read:இளையராஜாவின் கடைக்குட்டி மகனின் சொத்து மதிப்பு.. 16 வயதிலிருந்து சம்பாதித்து சேர்த்து வைத்த யுவன்

Trending News