திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

16 வயதில் சரத்குமாரின் படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா.. என்ன படம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தனது இசையின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் கையில் வைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றன.

ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கும் அதாவது ஒரு சிலர் மெலடி பாடல்களுக்கு இசை பட்டையைக் கிளப்புவார்கள். மற்ற சிலர் குத்துப்பாடலுக்கு சிறப்பாக இசையமைப்பார்கள்.

ஆனால் யுவன் சங்கர் ராஜா பொருத்தவரை மெலடி மற்றும் குத்து என அனைத்திலும் சிறப்பாக இசையமைப்பார். எப்போதும் திறமையான நபர்களுக்கு பெரிதளவு பாராட்டும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை. யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் இவருக்கு பெரிதளவு எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை.

yuvan shankar raja
yuvan shankar raja

சமீபத்தில் அம்மா கிரியேசன் தயாரிப்பாளர் சிவா. யுவன் சங்கர் ராஜாவின் 16 வயதில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு பஞ்சு ஐயா மற்றும் இளையராஜா ஐயா ஆசிர்வாதத்துடன் யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் படத்திற்காக இசையமைத்த முதல் பாடல் பற்றிய அனுபவத்தை புகைப்படமாக நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும் ஒரே நாளில் அப்போதே யுவன்சங்கர்ராஜா 2 பாடலுக்கு இசையமைத்ததாகவும், மேலும் லிட்டில் மாஸ்டர் யுவன் என பதிவிட்டுள்ளார். தற்போது யுவன் சங்கர் ராஜாவின் சிறுவயது புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Trending News