திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சினிமாவுக்கு வந்த 24 வருஷத்தில் யுவன் இசையமைக்காத இரண்டு முன்னணி நடிகர்கள்.. இனிமேலும் கஷ்டம்தான்!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க வந்த 23 வருடங்களில் தற்போது வரை இரண்டு முன்னணி நடிகர்கள் படங்களில் பணியாற்றியது இல்லை என்ற செய்தி பரவி வருகிறது.

இசைஞானி இளையராஜாவின் மகன்தான் யுவன் ஷங்கர் ராஜா. 16 வயதில் அரவிந்தன் என்ற படத்தின் மூலம் 1996 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் அவருக்கு வரவேற்பு கிடைத்த படம் என்றால் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான துள்ளுவதோ இளமை படம் தான்.

அதனைத் தொடர்ந்து வெளிவந்த காதல் கொண்டேன், செவன் ஜி ரெயின்போ காலனி படங்களில் யுவன் சங்கர் ராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது. பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் விருப்பமான மியூசிக் டைரக்டர்களில் மிக முக்கியமான இடம் பிடித்த யுவன் சங்கர் ராஜா தற்போது வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரது படங்களிலும் பணியாற்றவில்லை.

இனிமேலும் வாய்ப்பு கிடைக்குமா என்றால் சந்தேகம்தான். ரஜினி தற்போது பெரும்பாலும் அனிருத் இசையமைக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறார். இளம் ரசிகர்களிடையே அவரது படத்தில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்பதால் ரஜினி நடிக்கும் படங்களில் இனி அனிருத் அல்லது ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பாளராக இருப்பார்கள். அவர்களையும் விட்டால் இமான் தான்.

kamal-rajini-cinemapettai
kamal-rajini-cinemapettai

அதேபோல் கமல் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் அவரது படங்களில் பெரும்பாலும் ஜிப்ரான் என்பவருக்கு அதிக வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் கமல் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் விக்ரம் படத்திற்கு அனிருத், இந்தியன் 2 படத்திற்கு ஏ ஆர் ரகுமானும் இசையமைத்து வருகின்றனர். இனியும் இவர்களது படங்களில் இசையமைக்க யுவன் சங்கர் ராஜாவுக்கு கிடைக்குமா என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.

Trending News