திங்கட்கிழமை, பிப்ரவரி 24, 2025

அஜித் சொன்னதை கேட்காத யுவன்சங்கர் ராஜா.. நான் என்ன சார் பண்ணட்டும்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவரது பாடல்கள் மனதிற்கு அமைதியை தரும் வகையில் இருப்பதாகவும், குறிப்பாக காதல் தோல்விக்கு சிறந்த மருந்தாக இருப்பதாகவும் இன்றைய இளைஞர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள்.

நடிகர் அஜித்தின் பல வெற்றிப் படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார். இந்த பயணம் தீனா படம் முதல் தற்போது வலிமை வரை தொடர்கிறது. சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், அந்த வீடியோவில் மிகவும் முக்கியமானதாக யுவனின் தீம் மியூசிக் அமைந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய யுவன் அஜித் குறித்த ஒரு சுவாரஸ்ய செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், “நேர்கொண்ட பார்வை படத்தின் இசைப் பணிகளின் போது அஜித் என்னை அழைத்து, இந்த படத்தின் இசையில் கிடாரை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.

yuvan-shankar-raja

இதற்கு முந்தைய படங்களில் கிடாரை அதிகமாக பயன்படுத்தி உள்ளீர்கள் என்று கூறினார். ஆனால், அப்படத்தில் என்னால் கிடார் இசையைத் தவிர்க்க இயலவில்லை. இருப்பினும், தற்போது வலிமை படத்தில் அதை ஒரு சவாலாக எடுத்து மிரட்டலான இசையமைத்து உள்ளேன்” என கூறியுள்ளார்.

இதன் மூலம் வலிமை படத்தின் பாடல்கள் வெறித்தனமாக இருக்கும் என தெரிகிறது.

Trending News