புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வைரலாகும் யுவன் சங்கர் ராஜா சம்பளம்.. லவ் டுடே படத்துக்கு மியூசிக் போட்டது ஒரு குத்தமா

2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய ட்ரெண்ட் ஆன திரைப்படம் லவ் டுடே. கோமாளி பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம். இந்த படம் இந்த ஆண்டு கோலிவுட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றைய இளைஞர்களின் பல்ஸை பக்காவாக பிடித்து தன்னுடைய சிறப்பான திரைக்கதையினாலும், நடிப்பினாலும் ரசிகர்களை கிறங்கடித்தார்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ஐந்து கோடி. ஆனால் இந்த படம் இதுவரை 90 கோடி வசூல் செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன பின்பும் இந்த படம் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.

Also Read: அள்ளிக் கொடுத்த 100 கோடி வசூல் கிள்ளி கொடுத்த தயாரிப்பாளர்.. லவ் டுடே படத்திற்கு பிரதீப் வாங்கிய சம்பளம்

இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு உண்டு. 2k கிட்ஸ்களுக்கு ஏற்றவாறு இசையமைத்து இருந்தார். ‘சொல்லுங்க மாமா குட்டி’, ‘ என்னை விட்டு போகாதே’, ‘பச்சை இலை’ பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் ‘சொல்லுங்க மாமா குட்டி’ இன்று வரை நெட்டிசன்களால் பயங்கர ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

இப்போது இந்த படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் வைரலாகி வருகிறது. லவ் டுடே படத்திற்காக யுவன் வாங்கிய சாம்பல்கள் 1.5 கோடி தானாம். யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கடந்த சில வருடங்களாகவே பாடல்கள் சரியாக அமையாததால் தான் அவருக்கு சம்பளம் இவ்வளவு குறைவாக தரப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Also Read: கோடம்பாக்கத்தில் குஸ்தியை ஏற்படுத்தும் லவ் டுடே பிரதீப்.. நன்றி கடனுக்காக செய்த வேலையால் வந்த விபரீதம்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஒரு படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் . அனிருத் ஒரு படத்திற்கு 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவர்கள் இருவரின் சம்பளமும் இப்படியிருக்க 25 வருடத்திற்கும் மேலாக இசையமைத்து வரும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு 1.5 கோடி சம்பளம் என்பது இப்போது இணையதளத்தில் பேசுபொருளாகி வருகிறது.

ஆனால் லவ் டுடே திரைப்படம் மிக குறைவான பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ஆகும். அதனால் கூட யுவன் ஷங்கர் பெருந்தன்மையாக தன்னுடைய சம்பளத்தை கணிசமாக குறைத்து இருக்கலாம். சம்பளம் குறைவாக இருந்தாலும் யுவன் பழைய பார்மில் தான் இருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கிறார். அதற்கு ‘சொல்லுங்க மாமா குட்டி’ பாடலே சிறந்த உதாரணம்.

Also Read: 2022-இல் குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த 6 படங்கள்.. ஆல் ரவுண்டராக கலக்கிய பிரதீப்

Trending News