2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வாங்குவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அதற்கு முன்னரே அவருக்கு கேன்சர் நோய் இருப்பது கண்டறியப்பட்டு நோயுடன் விளையாடி வந்தார்.
உலக கோப்பை போட்டி முடிந்த பின்னர் மருத்துவமனையில் சேர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று போராடி மீண்டும் அணியில் இணைந்தார். இந்திய அணியில் ஒரு ஜாலியான பேர்வழி என்றால் இவரை கூறலாம். நோயிலிருந்து மீண்டு வந்த பின்னரும் தனது திறமையை பல போட்டிகளில் நிரூபித்து சிறப்பாக செயல்பட்டார். அதன் பின்னர் வயது மூப்பு காரணமாக தற்போது அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்.
தற்போது யுவராஜ் சிங் துபாய் நாட்டிலுள்ள தனியார் உயிரியல் பூங்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கே சிம்பன்ஸி உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்துள்ளார். அதுமட்டுமின்றி புலி மற்றும் சிங்கம் இரண்டிற்கும் கலப்பு இனமான “லைகர்” எனப்படும் விலங்கிடம் கயிறு கட்டி இழுத்து விளையாடியுள்ளார்.
ஒரு முனையில் யுவராஜ் சிங் மற்றும் இரண்டு நண்பர்கள், மறுமுனையில் லைகர் விலங்கு பல்லால் கவ்விய வயிறு என இழுத்து தோல்வி அடைந்துள்ளார். அவர் தோல்வியடைந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.